News

Sunday, 28 August 2022 02:59 PM , by: Poonguzhali R

TRB: TNTRB's Important Announcement for Teachers!

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தமிழகத்தில் உள்ள சுமார் 3,236 பணியிடங்களுக்குச் சான்றிதழ் சரி பார்ப்புக்கெனத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான தரப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2020-2021ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 01 மற்றும் கணினிப் பயிற்றுநர் நிலை 01 நேரடி நியமனத்திற்கான அறிக்கை எண். 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது என்பது நினைவு கூறத்தக்கது. அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 நாளில் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டன.

25.08.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிகைச் செய்தியில் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தின் வழியாக 26.08.2022 முதல் 30.08.2022 வரை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கீழ்கண்ட பாடங்களுக்கு 12 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மற்றும் பத்திரிக்கைச் செய்தியினை தொடர்ந்து பார்த்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க

விவசாயப் பயிர்களுக்குக் காப்பீடு செய்ய அழைப்பு!

விமான நிலையத்துக்கு நிலம் கொடுத்தால் அரசு வேலை உறுதி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)