பொறியாளர்கள்-மருத்துவர்கள் என்று அதிகம் படித்தவர்கள் பெறும் சம்பளத்தைவிட டிரக் ஓட்டுநர்களுக்கு தான் சம்பளம் அதிகம் வழங்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
வேலை கிடைக்கவில்லை என்று பலர் புலம்பிக்கொண்டே இருக்கிறார்கள், வாங்கப்பா வேலைக்கு என்று 72 லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்து, சூப்பர் போனஸ், வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை கொடுத்தாலும் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்பது அதிர்ச்சியை உண்டாகும் செய்தி.
பொதுவாக வாகன ஓட்டுநர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் கிடைக்காது. ஆனால் அது உண்மையல்ல. இந்த நாட்டில் லாரி டிரைவர்களுக்கு சம்பளம், ஆண்டுக்கு 72 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது என்பதைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும்.
தற்போது, பிரிட்டனில்(BRITAIN) உள்ள சூப்பர் மார்க்கெட் துறைக்கு ஓட்டுநர்களின் தேவை அதிகம், தேவைக்கு ஏற்ப ஆட்கள் கிடைக்காத பட்சத்தில், ஆண்டுக்கு 72 லட்சத்துக்கும் அதிகமான சம்பளம் வாகன ஓட்டுநர்களுக்கு வழங்க பிரிட்டன் சூப்பர் மார்க்கெட்கள் முடிவு செய்துள்ளன.
இங்கிலாந்தின் பல்பொருள் அங்காடிகளில், டிரக் டிரைவர்களுக்கு ஆண்டுக்கு 70,000 பவுண்டுகள் (ரூ. 70,88,515) சம்பளத்துடன், அவர்களுக்கு 2000 பவுண்டுகள் அதாவது சுமார் 2,02,612 ரூபாய் போனஸும் வழங்கப்படுகிறது.
ஓட்டுனர்களுக்கு இவ்வளவு சம்பளமா?(Is this the salary for drivers?)
டெஸ்கோ மற்றும் செயின்ஸ்பரி போன்ற நிறுவனங்கள், அதிகமான சம்பளத்திற்கு டிரைவர்களை சேர்க்கின்றனர். தேவையை விட 100,000 ஓட்டுநர்கள் குறைவாக இருக்கும் நிலையில் லாரி டிரைவர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது.
அதிலும் அனுபவம் வாய்ந்த ஓட்டுனர்களாக இருந்தால், அவர்களுக்கு லட்சக்கணக்கில் ஊதிய உயர்வு கொடுத்து பணியில் தக்க வைத்துக் கொள்கின்றனர்.
மேலும் படிக்க:
பொதுமக்களுக்கு நற்செய்தி! ரு.35,000-க்கு கீழ் சென்றது தங்கம்
வீட்டில் இருந்து ரூ.50,000 சம்பாதிக்க மத்திய அரசின் வாய்ப்பு!