1. செய்திகள்

பொதுமக்களுக்கு நற்செய்தி! ரு.35,000-க்கு கீழ் சென்றது தங்கம்

T. Vigneshwaran
T. Vigneshwaran

Gold price down

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை (Gold Rate) ஒரு கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ. 4,365-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 400 குறைந்து 34,920 ரூபாயில் விற்கப்படுகிறது.

18 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ. 3,576-கும் 14 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ. 2,833-க்கும் விற்பனை ஆகி வருகிறது.

இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 1.50 குறைந்து ரூ. 65.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 65,550-க்கும்  விற்பனையாகிறது.

தேசிய அளவில் டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் தங்கத்தின் விலையில் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, டெல்லியில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 46,150 ஆகவும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 50,350 ஆகவும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் 10 கிராம் தங்கம் 46,300 ரூபாய்க்கும் 24 கேரட் 10 கிராம் தங்கம் 49,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.  மும்பையில், 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 45,780 ஆகவும் 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 46,780 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை (Silver Rate) மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லியில் ஒரு கிலோ ரூ. 67,800 விற்பனையில் உள்ளது.

சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் மாறிக்கொண்டே இருக்கிறது.

உலகளாவிய சந்தைகளில் (International Markets) நேர்மறையான அணுகுமுறை இருப்பதால், தங்கத்தில் முதலீடு செய்ய இது சரியான நேரமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி (Tax) வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை வேறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றத்தை பார்க்கலாம்.

மேலும் படிக்க:

சற்றே குறைந்தது தங்கத்தின் விலை, நிலவரம் இங்கே !

ஒரே நாளில் குறைந்த தங்கம் விலை! தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு !

 

English Summary: Good news for the public! Gold went below Rs 35,000 (1)

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.