கடும் விலை வீழ்ச்சியால், வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், மஞ்சளை (Turmeric) ஏலத்துக்கு கொண்டு செல்ல விவசாயிகள் தயக்கப்படுகின்றனர். இதனால், பெருந்துறை கோபி மஞ்சள் சந்தைகளில், மஞ்சளுக்கான ஏலம் நடைபெறவில்லை.
மஞ்சள் ஏலம்:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, கருமாண்டி செல்லிபாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு அருகே செம்மாம்பாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் ஆகிய இடங்களில் மஞ்சள் ஏலம் (Turmeric Auction)நடைபெறுகிறது. 2011 ஆம் ஆண்டில் மஞ்சள் ஒரு குவிண்டால் ரூபாய் 17,00-க்கு விற்பனையானது. அதன் பிறகு மஞ்சளின் விலை குறைந்து கொண்டே வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை, சுமார் ரூபாய் 8,000-க்கு மஞ்சள் விற்பனையானது. ஆனால், தற்போது மஞ்சளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூபாய் 6,000 வரை விற்பனையாகிறது.
விலை வீழ்ச்சி:
விலை வீழ்ச்சியால் மஞ்சளின் வரத்தும் குறைந்துள்ளது. நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், விவசாயிகள் மஞ்சளை பாதுகாப்பாக சேமித்து வைத்துள்ளனர். ஈரோட்டில் நடைபெற்ற ஏலத்தில், 887 மஞ்சள் மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டு, 316 மூட்டைகள் விற்பனையானது. இதில் ஒரு குவிண்டால் மஞ்சள் விலை, ரூபாய் 4,899 முதல் ரூபாய் 6,095 வரையும், கிழங்கு மஞ்சள் ரூபாய் 4,599 முதல் ரூபாய் 5,695 வரையும் விலை போனது. மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காதலால், மஞ்சள் வரத்து குறைந்து, வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மஞ்சள் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு, மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வெண்டைக்காய் விலை குறைவு! வேதனையில் ஆற்றில் கொட்டிய விவசாயிகள்!
ரேஷன் கடைகளில் பெல்லாரி வெங்காயம் விற்பனை! விலை என்னவாக இருக்கும்?