1. செய்திகள்

ரேஷன் கடைகளில் பெல்லாரி வெங்காயம் விற்பனை! விலை என்னவாக இருக்கும்?

KJ Staff
KJ Staff
Onion Sale in Ration Shop

Credit : The Financial Express

கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்த நிலையில், சிலர் வெங்காயத்தை பதுக்கி வைத்தனர். பதுக்கி வைத்த பெல்லாரி வெங்காயத்தை பறிமுதல் (Confiscation) செய்து, தரம் பிரித்து ரேஷன் கடைகளில் (Ration shop) விற்பனைக்கு அனுப்பியுள்ளது அரசு. ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெல்லாரி வெங்காயம் பறிமுதல்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் சில தினங்களுக்கு முன் சட்டவிரோதமாக இருப்பு வைக்கப்பட்டிருந்த பெல்லாரி வெங்காயத்தை திருச்சி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறையினரால் (Department of Civil Supplies and Criminal Investigation) கண்டறியப்பட்டதை தொடர்ந்து பறிமுதல் செய்ய கலெக்டர் வெங்கட பிரியா உத்தரவிட்டார். இதைதொடர்ந்து 486 டன் பெல்லாரி வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டது.

மக்களுக்கு விற்பனை:

கைப்பற்றப்பட்ட பெல்லாரி வெங்காயம் கூட்டுறவுத்துறை (Cooperative) மூலமாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு விற்பனை இணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு மாநில கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் 150 பெண், 50 ஆண் பணியாளர்களை கொண்டு, 9,915 பைகளில் உள்ள 486 மெட்ரிக் டன் பெல்லாரியை நேற்று வரை 3,255 பைகள் தரம் பிரித்தது. அதில் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கழிவுபோக, 156 மெட்ரிக் டன் பெல்லாரியை தமிழ்நாடு மாநில கூட்டுறவு விற்பனை (Tamil Nadu State Co-operative Sales) இணையம் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்தது.

அம்மா சிறு பல்பொருள் அங்காடி, அம்மா பசுமை காய்கறி கடைகள் மற்றும் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட ரேஷன் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பைகளில் இருந்த பெல்லாரியை தரம் பிரிக்கும் பணி தமிழ்நாடு மாநில கூட்டுறவு விற்பனையின் மூலம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் பெரம்பலூர் நகர் மற்றும் சுற்றுவட்டார ரேஷன் கடைகளில் கிலோ ரூ.45க்கு இந்த தரம் பிரிக்கப்பட்ட பெல்லாரி வெங்காயம் விற்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் கோரிக்கை:

வெளிமார்க்கெட்டில் ரூ.80-க்கு விற்ற பெல்லாரி வெங்காயம் (Bellary onion) தற்போது ரூ.70-க்கு விற்கிறது. இதனால் வியாபாரிகளே பெல்லாரியை ஆள்மாற்றி வாங்கி வெளியே திரும்ப கூடுதல் விலைக்கு விற்கும் அபாயம் உள்ளது. இதை தடுக்க கூட்டுறவுத்துறை முன்வர வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் பாண்டித்துரை, நேற்று மட்டுமே 15 டன் பெல்லாரி, ரேஷன் கடைகளில் விற்பனைக்கு வழங்கப்பட்டது. ஒருவருக்கு 2 கிலோ வழங்க அனுமதிக்கப்படும். வியாபாரிகளுக்கு (merchants) வழங்க கூடாதென விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்படவுள்ளது. 60 சதவீத வெங்காயம் மட்டுமே பயன்படும். அவை அனைத்தும் பொதுமக்களுக்கு மலிவு விலையில் (Affordable price) விற்கப்பட்டு விடும் என்றார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

பயிர்க் காப்பீடு செய்ய வங்கிகள் மூலம் கூடுதல் மையங்கள் வேண்டும்! விவசாயிகள் கோரிக்கை!

விவசாயிகளிடம் சொட்டு நீர்பாசன முறையை ஊக்கப்படுத்த 100% மானியம்!

English Summary: Bellary onions on sale in ration shops! What will the price be?

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.