யுபிஎஸ்சி இறுதி முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) அறிவித்துள்ளது.அதன்படி,இத்தேர்வில் மொத்தம் 685 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில்,முதல் நான்கு இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர்.
இவர்கள்,ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் மற்றும் மத்திய அரசின் ஏ மற்றும் பி பிரிவு பணிகளில் பணியமர்த்தப்படவுள்ளனர்.
இந்த முறை,யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் ஸ்ருதி ஷர்மா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.அங்கிதா அகர்வால் இரண்டாவது இடத்தையும், காமினி சிங்லா மூன்றாவது இடத்தையும்,ஐஸ்வர்யா என்பவர் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளார்.
அதே சமயம்,தமிழகம் அளவில் ஸ்வாதி ஸ்ரீ என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.ஆனால்,இவர் தேசிய அளவில் 42 வது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
UPSC சிவில் சர்வீசஸ் 2021 இறுதி முடிவை எவ்வாறு சரிபார்க்கலாம்?(How to check the final result of UPSC Civil Services 2021?)
- UPSC சிவில் சர்வீசஸ் 2021 இறுதி முடிவுகளைச் சரிபார்க்க, அனைத்து விண்ணப்பதாரர்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்ற வேண்டும்:
- அதிகாரப்பூர்வ https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் உள்நுழையவும்.
- முகப்புப் பக்கத்தில்,"UPSC சிவில் சர்வீசஸ் முடிவு 2021 -இறுதி முடிவு" என்பதைக் கிளிக் செய்யவும்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்களுடன் ஒரு PDF கோப்பு காட்டப்படும்.
- அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க
தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.! வெளியான முக்கிய அறிவிப்பு.!
தமிழகத்தில் ஜூலை 1 முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!