மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு பொதுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்து கடந்த மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜூன் 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி நேரம் மாற்றம்(School time change)
இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் வேலை நேரம் மாற்றம் செய்யப்படும் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு 2022-2023ஆம் கல்வியாண்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அதில் புதிய திட்டமாக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியில் வழங்கப்படும், அதனால் பள்ளி வேலை நேரங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதாவது மாணவர்கள் காலையில் 8.30மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும் என்றும் 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூலை 1 முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
Share your comments