யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்-இல் (UPSC) 42 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்பெஷலிஸ்ட் கிரேடு III, வக்கீல், உதவிப் பேராசிரியர், கால்நடை மருத்துவர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான UPSConline.nic.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
அக்டோபர் 13.
காலியிடங்களின் விவரங்கள்
மொத்தம் 42 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஸ்பெஷலிஸ்ட் கிரேடு III - 28 காலியிடங்கள்
வழக்கறிஞர் 12 காலியிடங்கள்
உதவி பேராசிரியர் 2 காலியிடங்கள்
கால்நடை அலுவலர் 10 காலியிடங்கள்
UPSC ஆட்சேர்ப்பு 2022க்கான (Scale Pay)
வழக்குரைஞர்- ஊதியம் ரூ. 47600 முதல் ரூ. 151100
ஸ்பெஷலிஸ்ட் கிரேடு III (பொது மருத்துவம்)- ஊதியம் ரூ. 67700 முதல் ரூ. 208700
உதவிப் பேராசிரியர் (Ayurveda), பால் ரோகா (Kaumarbhritya) - ஊதியம் ரூ. 15600 முதல் ரூ. 39100
உதவிப் பேராசிரியர் (யுனானி), மோலாஜத் - ஊதியம் ரூ. 15600 முதல் ரூ. 39100
கால்நடை மருத்துவர் - ஊதியம் ரூ. 15600 முதல் ரூ. 39100
UPSC ஆட்சேர்ப்பு 2022 க்கு எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த முறையிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது மற்றும் நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.
விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதி, அனுபவம், விரும்பத்தக்க தகுதி(கள்) போன்ற விண்ணப்பத்தில், ஆவணங்களாகவோ/சான்றிதழ்களாகவோ பதிவேற்ற வேண்டும். இவை PDF format-இல் இருத்தல் வேண்டும்.
மேலும் படிக்க:
PFI-க்கு தடை: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு, வன்முறை வெடிக்கும் அபாயம்