1. செய்திகள்

PFI-க்கு தடை: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு, வன்முறை வெடிக்கும் அபாயம்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Ban on PFI: risk of violence

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் கிளைகளை பரப்பி செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய அரசு, பாஜக, RSS, அமைப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறது.

அதே நேரம் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலவரங்களை தூண்டி வருவதாக குற்றம்சாட்டி அவற்றை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தது குறிப்பிடதக்கது.

PFI அமைப்பிடம் சோதனை

இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை செய்த NIA. அதிகாரிகள் முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்து இருக்கிறார்கள். இதனை அந்த அமைப்பினர் மட்டுமின்றி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், மதசார்பற்ற இயக்கங்களும் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

8 மாநிலங்களில் சோதனை இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் நேற்று மீண்டும் காவல்துறை சோதனை நடத்தியது. பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் PFI. நிர்வாகிகள் வீடுகளில் காவல்துறை சோதனை மேற்கொண்டது.

PFI-க்கு தடை

நேற்று நடைபெற்ற சோதனைக்கு பின்னர் நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளை சட்டவிரோதமானவை என அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து இருக்கிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை, பிரதமர் மோடியை கொல்ல சதி என பல்வேறு குற்றச்சாட்டுகளை அந்த அமைப்பு மீது NIA. சுமத்தியது.

துணை அமைப்புகள் இத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துணை அமைப்புகளான ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பு, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில், என்.சி.எச்.ஆர்.ஓ மனித உரிமை அமைப்பு, நேஷனல் உமன்ஸ் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேசன், ரிஹாப் ஃபவுண்டேசன் ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடதக்கது.

பலத்த பாதுகாப்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட NIA. சோதனையை கண்டித்து கேரளாவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் வீடுகள் மீது மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் PFI அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையால் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க:

சின்ன வெங்காயம் சந்தைப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை!

தமிழகம்: நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்களை கோரும் விவசாயிகள்!

English Summary: Ban on PFI: Tight security across country, risk of violence Published on: 28 September 2022, 10:53 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.