சென்னையில் பெரும்பாலான காய்கறிகளின் விலை இந்த வாரம் ரூ.10 வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மொத்த காய்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சின்ன வெங்காயம் ரூ.20 வரை அதிகரிக்கும்
சின்ன வெங்காயத்தின் (Small Onion) வரத்துக் குறைவு காரணமாக அதன் விலை வரும் நாட்களில் 20 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். சின்ன வெங்காயத்தைப் பொருத்த வரை திருச்சி, பொள்ளாச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து தான் அதிகளவில் கோயம்பேடு சந்தைக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
பல்வேறு மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக அதிக அளவிலான சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் இதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
உருளைக்கிழங்கி விலை உயரும்
மேலும் பொதுமக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கின் (Potato) விலை 10 ரூபாய் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது, தற்போது உருளை கிலோவுக்கு 35 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது வரும் நாட்களில் கிலோவும் 45 ரூபாய் வரை விற்பனையாகும் என்றும் மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சில்லறை விற்பனையில் கிலோவுக்கு 50 ரூபாய் வரை விற்பனையாகவும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கத்திரிக்காய் (Brinjal) மற்றும் வெண்டைக்காய் (ladies figner) விலை குறையை வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், இந்த மாவட்டங்களில் இருந்து தொடர்ந்து இறக்குமதி எந்த பாதிப்பும் இன்றி நடைபெறுவதால் இந்த காய்கறிகள் விலை உயர வாய்ப்பு இல்லை என்று மொத்த காய்கறி வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
இந்த இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு - விவரம் உள்ளே
பால் பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம்
ரசாயன கழிவுகள் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றம் - விவசாயிகள் கவலை