மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் குறித்த இசை நாட்டிய நாடகத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மற்றும் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். வீர மங்கை வேலுநாச்சியார் நாட்டிய நடகம் தமிழகம் முழுவதும் வலம் வர உள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் வீர சரித்திரத்தை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இசையார்ந்த நாட்டிய நாடகம் காண்போர் அனைவரையும் கவர்ந்தது.
வேலுநாச்சியார் அவர்கள் மருது சகோதரர்கள் ஆதரவுடன் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி, வலுவான ஓர் எதிர்ப்புப் படையினை உருவாக்கி, ஏழு ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு மாபெரும் வெற்றி பெற்று சிவகங்கை சீமையை மீட்டெடுத்தார். பின்னர், 1789ம் ஆண்டு வரை சிவகங்கையை ஆட்சி செய்தார்.
வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் கலைப்பண்பாட்டுத் துறை மூலம் ஓ.வி.எம். தியேட்டர்ஸ் நிறுவனம் இணைந்து 62 நாடக கலைஞர்கள் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் முதலைமச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நாடக கலைஞர்கள் காவிய கதைகள் குறித்தும் வண்ண விளக்குகளின் ஒளியின் பின்னணியில், பொறி பறக்கும் வசனங்கலுடன் நாடகம் உயிரோட்டமாக இருந்தது. இசையுடன் கூடிய இந்த நாட்டிய நாடகம் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும், வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு குறித்த இந்த இசை நாட்டிய நாடகம் திருச்சியில் 27.08.2022-அன்று தலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியிலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 28.08.2022-அன்று இந்துஸ்தான் கல்லூரியிலும், சிவகங்கை மாவட்டத்தில் 30.08.2022-அன்று அரண்மனை வளாகத்திலும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
மாற்றுத்திறனாளி மாணவருக்கு மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தில் ரூ.51 லட்சம் வருமானத்துடன் வேலை!
ஓய்வுபெற்ற தொழிலார்கள் மற்றும் துணைவியருக்கு இலவச பயண அட்டை- அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!