1. செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவருக்கு மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தில் ரூ.51 லட்சம் வருமானத்துடன் வேலை!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Microsoft Employee

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டம் சட்டிகடிலோங் கிராமத்தைச் சேர்ந்த சவுரப் பிரசாத் என்ற மாணவர், டெல்லி ஐஐடியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். பார்வைக் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளியான சவுரப், மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப்பை வெற்றிகரமாக முடித்தார்.

இந்த நிலையில், அவருக்கு மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. 51 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானத்துடன் வேலை பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளியாக இருந்தபோதும் தன்னம்பிக்கையுடன் பொறியியல் படிப்பில் வெற்றி பெற்றுள்ளார் சவுரப்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த சவுரப் கிளாகோமா எனப்படும் கண் நோயால் பாதிக்கப்பட்டு, 11 வயதில் கண்பார்வையை இழந்தார். இதையடுத்து பெற்றோரின் ஊக்கத்தால், எல்லா தடைகளையும் உடைத்து எறிந்து, பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்தார்.

பத்தாம் வகுப்பில் 97 சதவீத மதிப்பெண்களும், பன்னிரண்டாம் வகுப்பில் 93 சதவீத மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தார். தற்போது பொறியியல் பட்டப்படிப்பிலும் சாதனை படைத்துள்ளார். சவுரப்பின் வெற்றி மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது.

மேலும் படிக்க

ஓய்வுபெற்ற தொழிலார்கள் மற்றும் துணைவியருக்கு இலவச பயண அட்டை- அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

English Summary: Handicapped student gets job at Microsoft with Rs 51 lakh income! Published on: 24 August 2022, 07:33 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.