அந்தந்தக் காலத்திற்கு ஏற்ப, மக்கள் விரும்பும் பொருட்களை, அவர்களைக் கவரும் வகையில் தயாரித்து விற்பனை செய்வது வியாபாரிகளின் தந்திரம். இதுதான் அவர்களின் தொழில் ரகசியம் என்றும் கூறலாம்
அந்த வகையில், தற்போது, ராக்கெட் வேகத்தில் அதிகரித்திருக்கும் பெட்ரோல் விலையைச் சுட்டிக்காட்டும் வகையில், தன் கடையில் பொருள் வாங்குவோருக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கி மகிழ்விக்கிறார் வியாபாரி ஒருவர்.
கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நெருக்கடியும், சுமையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தன் கடையில் பொருள் வாங்குவோருக்கு இலவசமாக பெட்ரோல் என விளம்பரம் செய்துள்ளார், வாரணாசியை சேர்ந்த கடை உரிமையாளர் ஒருவர். அவரது விளம்பரப் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
வாரணாசியில் உள்ள மொபி வோர்ல்ட் என்ற மொபைல் கடையில், மொபைல் சார்ந்த உபகரணங்களை வாங்குவோருக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும் என விளம்பரப் போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது.
விளம்பரம்
இவரது கடையில் எந்தவொரு மொபைல் உபகரணம் வாங்கினாலும் 2 முதல் 4 எலுமிச்சம்பழம் இலவசமாக வழங்கப்படும். எனினும், இலவசமாக பெட்ரோல் பெற வேண்டுமெனில் குறைந்தபட்சமாக 10,000 ரூபாய்க்கு பொருட்களை வாங்கியிருக்க வேண்டும்.
மேலும் படிக்க...
ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு- கல்வித்தகுதி 8ம் வகுப்பு!