1. மற்றவை

வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ.7,500 உதவித்தொகை- பெறுவது எப்படி?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
How to get Rs. 7,500 / - for unemployed youth?


வருமானம் இன்றித் தவிக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு உதவும் வகையில், மாநில அரசு சார்பில் மாதம் ரூ.7,500 வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை, பட்டப்படிப்பு படித்துவிட்டு வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் என்பது பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு பொருளாதார ரீதியான மனஉளைச்சலை ஏற்படுத்தும் என்பதால், அவர்களுக்கு உதவ அரசும் முன்வந்துள்ளது.

அந்த வகையில், கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலையில்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு நிதியுதவி அளிக்க வேலையின்மை உதவித்தொகையை (Unemployment Allowance) டெல்லி மாநில அரசு வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், டெல்லியைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரிகளுக்கு மாதம் 5,000 ரூபாயும், முதுகலை பட்டதாரிகளுக்கு 7,500ரூபாயும் நிதியுதவியாக வழங்கப்படுகிறது.

தகுதி (Qualification)

டெல்லியில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்களுக்கு வேலையின்மை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தப் பதிவு மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நீங்களும் உங்கள் வேலையை இழந்திருந்தாலோ அல்லது வேலையே கிடைக்காமல் இருந்தாலோ, நீங்கள் பட்டதாரி அல்லது முதுகலை பட்டதாரியாக இருந்தால் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விண்ணப்பிப்பது எப்படி? (How to apply?)

  • இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க, முதலில் நீங்கள் டெல்லி அரசின் https://jobs.delhi.gov.in/ என்ற முகவரிக்குச் செல்லவும்.

  • இப்போது முகப்புப் பக்கத்தில் உள்ள 'Job Seeker' என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

  • உடனே ஒரு புதிய பக்கம் திறக்கும்.

  • உங்களின் அனைத்து விவரங்களையும் (கல்வித் தகுதி) அதில் சமர்ப்பிக்கவும்.

  • அதன் பிறகு, உங்கள் மொபைலில் பதிவு ஐடி மற்றும் கடவுச்சொல் வரும். அதை வைத்து உள்நுழைய வேண்டும்.

  • இப்போது ’Edit or Update Profile’ என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும். ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில் உங்கள் பதிவு எண், மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.

  • கடைசியாக ‘submit' பட்டனை கிளிக் செய்தால் போதும் விண்ணப்ப கோரிக்கை அனுப்பப்பட்டுவிடும்.

தேவைப்படும் ஆவணங்கள்

  • ஆதார் அட்டை

  • பான் கார்டு

  • குடியிருப்பு சான்றிதழ்

  • மொபைல் எண்

  • பட்டதாரி அல்லது முதுகலை பட்டதாரி என்பதற்கான மதிப்பெண் பட்டியல்

  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பினால் மேலேக் கூறிய ஆவணங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க...

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு- கல்வித்தகுதி 8ம் வகுப்பு!

ஆலிவ் Oilலை அதிகம் பயன்படுத்தினால் பக்கவாதம் ஏற்படுமா?

English Summary: How to get Rs. 7,500 / - for unemployed youth? Published on: 22 April 2022, 10:28 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.