இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான கனவுகளில் ஒன்று, கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்பது தான். ஆனால், கோடீஸ்வரராக நாம் என்ன செய்ய வேண்டும். பணத்தை இதில் முதலீடு செய்ய வேண்டும் என யாரும் யோசிப்பது கூட இல்லை. ஏனெனில், இது பலருக்கும் சாத்தியமற்றதாக தோன்றலாம். ஆனால் சரியான திட்டங்களில் நமது பணத்தை முதலீடு செய்தால் அது நமக்கு நல்ல பலனையே கொடுக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
இந்தியாவில் பல ஆயிர கணக்கான முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அரசின் முதலீட்டு திட்டங்கள் என்றாலே அதற்கு தனி நம்பிக்கை உண்டு. ஏனெனில், அதற்க்கு அரசின் பாதுகாப்பு உண்டு. கணிசமான வருவாய் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக முதலீட்டுக்கு எந்த ஆபத்தும் இல்லை, என்ற நிலையில் நமக்கு முதலீடு செய்ய முழு நம்பிக்கையும்பிறக்கும். அந்த வகையில் நீங்கள் கோடீஸ்வரர் ஆக பயன்படும் ஒரு முதலீட்டு திட்டத்தை பற்றி தான் நாங்கள் உங்களுக்கு கூறப்போகிறோம்.
பலருக்கு நாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், நமது குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதற்க்கு ஒரு அருமையான திட்டம் தான் PPF திட்டம். குறுகிய காலத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் தொகையை பெற, அரசின் சிறு சேமிப்பு திட்டமான பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்யலாம் என்கின்றனர்கள் நிபுணர்கள். இந்த திட்டம் 15 ஆண்டுகால திட்டம். ஆக இந்த திட்டத்தில் 15 வருடம் கழித்து எனக்கு 1 கோடி ரூபாய் வேண்டும். அதற்காக எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் வாருங்கள் பார்க்கலாம்.
அரசின் பொது வருங்கால வைப்பு நிதி
இன்றையகால கட்டத்தில் பாதுகாப்பாக முதலீடு செய்ய நினைப்போருக்கு, அரசின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது ஒரு வரப்பிரசாதம் தான். ஏனெனில் முதலீட்டிற்கு பங்கம் இல்லாத ஒரு சிறந்த முதலீடு. இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது.
15 வருடம் கழித்து எவ்வளவு கிடைக்கும்?
இந்த திட்டத்தில், 15 வருடம் கழித்து 1 கோடி ரூபாய் வேண்டும். அதற்காக எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? தற்போதைய நிலவரப்படி, இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 7.1% ஆகும். இந்த திட்டத்திற்கு வரி சலுகையும் உண்டு. இந்த திட்டத்தில் முதிர்வுக்கு பின்னரும் 5 வருட தொகுப்புகளாக மீண்டும் தொடரலாம் என்பதால், இன்னும் கூடுதல் நன்மையாக பார்க்கப்படுகிறது.
எவ்வளவு முதலீடு?
PPF திட்டத்தில் (பைசாபஜார் கால்குலேட்டர் அடிப்படையில் எடுக்கப்பட்டது) மாதம் 9,000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இதன் மூலம் நீங்கள் வருடத்திற்கு 1,08,000 ரூபாய் முதலீடு செய்வீர்கள். இதனை 30 வருட காலத்திற்கு முதலீடு செய்யும்போது 1,11,24,655 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.
மொத்தம் எவ்வளவு?
ஆக 7.1% வட்டி விகிதத்துடன் கணக்கீடு செய்யும்போது 1 வருட முடிவில், உங்களது PPF கணக்கில் 1,15,668 ரூபாயாக இருக்கும். இதே இண்டாவது ஆண்டின் முடிவில் உங்களது கணக்கில் 2,39,548 ரூபாயாக இருக்கும். ஆக மொத்தத்தில் 30 ஆண்டுகள் இந்த திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்படி செய்யும் பட்சத்தில் 32,40,000 ரூபாய் முதலீடு செய்திரூப்பீர்கள். வட்டியுடன் சேர்த்து 11,124,655 ரூபாயாக உங்களது தொகை இருக்கும்.
குறைந்தபட்ச பங்களிப்பு?
அரசின் இந்த PPF கணக்கில் வருடத்திற்கு குறைந்தபட்சம், 500 ரூபாய் முதல் செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 12 பங்களிப்புகள் இருக்கலாம். அதாவது 12 தவணைகளாக உங்களது தொகையை செலுத்திக் கொள்ளலாம்.
எப்படி தொடங்குவது?
அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகள் மூலமும் தொடங்கிக் கொள்ளலாம். ஒரு வேளை துரதிஷ்டவசமாக PPF அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால், அவரது மனைவியோ அல்லது சட்டபூர்வமாக யார் வாரிசுதாரரோ அவர்கள் க்ளைம் செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க....
இந்த தபால் அலுவலக திட்டம் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்குவதுடன் நிரந்தர வருமானத்தையும் வழங்குகிறது!!
Post Office PPF: ஒண்ணுள்ள ரெண்டில்லை முழுசா 1 கோடி கிடைக்கும் - எப்படி தெரியுமா?
சிறுசேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிததில் மாற்றம்: வரும் காலாண்டில் வட்டி விகிதத்தை குறைத்தது