1. செய்திகள்

இந்த தபால் அலுவலக திட்டம் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்குவதுடன் நிரந்தர வருமானத்தையும் வழங்குகிறது!!

Sarita Shekar
Sarita Shekar

Savings

Post Office Saving Schemes:

தபால் அலுவலகம் பல சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்களில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இது குறித்து உங்கள் பணத்திற்கு அரசாங்க உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அதாவது உங்கள் பணம் குறித்த எந்த பயமம் இருக்காது. தபால் அலுவலகம் மற்றும் அவற்றின் அனைத்து சேமிப்புத் திட்டங்களையும் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்லப்போகிறோம். இந்த திட்டத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்வதால், உங்கள் பணம் எவ்வளவு காலம் இரட்டிப்பாகும் என்பதையும் நாங்கள் கூறுவோம். தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் மற்றும் அவற்றின் வட்டி விகிதங்களை பற்றியும் அறிந்து கொள்வோம்.

  1. தபால் அலுவலக கால வைப்புநிதி திட்டம் (Time Deposit)

இந்த தபால் நிலைய திட்டத்தில், 1 முதல் 3 ஆண்டு வரையிலான கால வைப்புநிதி திட்டத்திற்கு (TD), 5.5% வட்டி வழங்கப்படுகிறது. நீங்கள் அதில் முதலீடு செய்தால், உங்கள் பணம் சுமார் 13 ஆண்டுகளில் இரட்டிப்பாகும். இதேபோல், 5 ஆண்டு கால வைப்புத்தொகையில் சுமார் 6.7% வட்டியை பெறுவீர்கள். இந்த வட்டி விகிதத்துடன் பணம் முதலீடு செய்யப்பட்டால், உங்கள் பணம் சுமார் 10.75 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

  1. தபால் அலுவலகம் சேமிப்பு கணக்கு (Post Office Saving Account)

உங்கள் பணத்தை ஒரு தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் வைத்திருந்தால், பணம் இரட்டிப்பாகும் வரை நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஏனெனில், இந்த திட்டத்திற்கு 4.0 சதவீத வட்டி மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, உங்கள் பணம் இரட்டிப்பாக சுமார் 18 ஆண்டுகள் எடுக்கும். 

  1. தபால் அலுவலக தொடர்ச்சியான வைப்புத்தொகை திட்டம் (Recurring deposits)

தபால் அலுவலகத்தின் தொடர்ச்சியான வைப்புத்தொகை திட்டத்தில் (RD) பயனர்களுக்கு தற்போது 5.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. எனவே, இந்த வட்டி விகிதத்துடன் பணம் முதலீடு செய்யப்பட்டால், அது சுமார் 12.41 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

  1. தபால் அலுவலக மாத வருமான திட்டம் (Post Office Monthly Income Scheme)

தபால் அலுவலகத்தின் மாத வருமான திட்டத்திற்கு (MIS) 6.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்துடன் பணம் முதலீடு செய்யப்பட்டால், அது சுமார் 10.91 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

  1. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

தபால் நிலையத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு (SCSS) தற்போது 7.4% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் உங்கள் பணம் சுமார் 9.73 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

  1. தபால் அலுவலகம் PPF திட்டம். 

தபால் நிலையத்தின் தற்போதைய 15 ஆண்டு பொது வருங்கால வைப்பு நிதிக்கு (PPF) தற்போது 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதாவது, இந்த விகிதத்தில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க சுமார் 10.14 ஆண்டுகள் ஆகும்.

  1. சுகன்யா சம்ரிதி கணக்கு திட்டம். 

தபால் நிலையத்தின் சுகன்யா சமிரதி கணக்குத் திட்டத்திற்கு தற்போது அதிக வட்டியாக சுமார் 7.6% வட்டி வழங்கப்படுகிறது. சிறுமிகளுக்காக நடத்தப்படும் இந்த திட்டத்தில், பணத்தை இரட்டிப்பாக்க சுமார் 9.47 ஆண்டுகள் ஆகும்.

  1. தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம். 

தபால் நிலையத்தின் தேசிய சேமிப்பு சான்றிதழில் (NSC) திட்டத்திற்கு 6.8% வட்டி செலுத்தப்படுகிறது. இது 5 ஆண்டு சேமிப்புத் திட்டமாகும், இதில் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரியையும் சேமிக்க முடியும். இந்த வட்டி விகிதத்துடன் பணம் முதலீடு செய்யப்பட்டால், அது சுமார் 10.59 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

 

  1. கிசான் விகாஸ் பத்ரா திட்டம். 

தபால் அலுவலகம் கிசான் விகாஸ் பத்ரா (KVP) திட்டத்தில் 6.9 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்துடன், இங்கு முதலீடு செய்யப்பட்ட தொகை 124 மாதங்களில் (10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள்) இரட்டிப்பாகிறது.

மேலும் படிக்க..

பெண் குழந்தைகளுக்கு போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்: ரூ50,000 வீதம் முதலீடு; ரூ23 லட்சம் வருமானம்

தமிழ்நாடு அஞ்சல் துறையில் 3162 காலிப் பணியிடங்கள்! தகுதி 10ம் வகுப்பு மட்டுமே-இன்றே விண்ணப்பித்திடுங்கள்!

Post Office: மாதத்திற்கு 2,853 பிரீமியம்; ரூ .14 லட்சம் ரிட்டன் !

 

English Summary: This post office plan will double your money and give you a permanent income !!

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.