சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோநகர் இடையிலான மெட்ரோ ரயிலில் இன்று பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.
பிரதமர் பங்கேற்பு (Prime Minister's participation)
சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தல், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார்.
இதன் ஒருபகுதியாக வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோநகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
ஓசி பயணம் (Free Travel)
இதையொட்டி, இன்று மதியம் 2 மணியில் இருந்து இரவு 11 மணி வரை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்ய நிர்வாகம் அனுமதித்துள்ளது.இதன்மூலம், விமான நிலையம்- திருவொற்றியூர் விம்கோநகர், பரங்கிமலை- சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
நவீன தேஜஸ் ரயில்கள் (Modern Tejas trains)
இதனிடையே 500 நவீன தேஜஸ் வகை ரயில்களை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.
முதலாவது நவீன தேஜஸ் ரயில் டெல்லி ஆனந்த் விகார் முனையத்தில் இருந்து வருகிற நாளை இயக்கப்பட உள்ளது. ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த அகர்தலா- டெல்லி ராஜ்தானி விரைவு ரயிலுக்கு பதிலாக இந்த தேஜஸ் ரயில் இயக்கப்பட உள்ளது.
நீண்ட தூரம் செல்லும் விரைவு ரயில்களுக்கு பதிலாக, நவீன தேஜஸ் ரக ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விரைவில் 500 தேஜஸ் ரயில்களைத் தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க...
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி இல்லாததால் இறால் விலை கடும் வீழ்ச்சி!
காங்கயத்தில் நாளை கால்நடைத் திருவிழா!
பம்ப் செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும்- முதல்வர் அறிவிப்பு!