யூடியூப் பார்த்து ஊடுபயிராக வாட்டர் ஆப்பிள் விவசாயத்தில் ஈடுபட்டு நல்ல மகசூல் பார்த்து அசத்தி வருகிறார் திண்டுக்கல் மாவட்ட விவசாயி.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் மா, புளி, தென்னை போன்றவை முதன்மை பயிராக விளங்கும் நிலையில், யூடியூப் பார்த்து ஊடுபயிராக வாட்டர் ஆப்பிள் பயிரிட்டு அசத்தி வருகிறார் ராவுத்தம்பட்டியை சேர்ந்த சின்னன்(55).
சின்னனும் அப்பகுதியில் பயிரிடப்படும் பிரதான பயிர்களான மா, தென்னை, புளி ஆகியவற்றை விவசாயம் செய்து வந்து உள்ளார். அப்போது யூடியூப்பில் விவசாயம் தொடர்பான வீடியோக்களை பார்த்து, புதியதாக ஏதாவது செய்ய வேண்டும் என முயன்று வந்துள்ளார்.
அதிகரிக்கும் சந்தை தேவை:
நீர்ச்சத்து நிறைந்துள்ள வாட்டர் ஆப்பிளை இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய் உள்ளவர்களும், கருவுற்ற பெண்களும் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அதனால், வாட்டர் ஆப்பிள்களுக்கு சந்தையில் எப்போதும் நல்ல டிமாண்ட் உள்ளது.
இதனால் தனது தோட்டத்தில் ஊடுபயிராக சுமார் 15-க்கும் மேற்பட்ட வாட்டர் ஆப்பிள் மரங்களை வைத்து வேளாண்மை செய்து வருகிறார், விவசாயி சின்னன். தனது தோட்டத்தில் விளையக்கூடிய வாட்டர் ஆப்பிள்களை மதுரை, திண்டுக்கல், நத்தம் போன்ற இடங்களுக்கு கொண்டுச் சென்று பழக்கடைகளில் விற்பனை செய்து வருவது மட்டுமின்றி சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் நபர்கள், நீர்ச்சத்து இன்றி காணப்படும் பிரசவகால பெண்களுக்கும் இவர் நேரடியாக கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்.
ஒரு கிலோ வாட்டர் ஆப்பிள் சந்தையில் ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனைக்கு போகிறது. நத்தம் பகுதியில் யூடியூப்பில் பார்த்து மாற்று விவசாயம் செய்து அதிக லாபம் சம்பாதிக்கும் விவசாயி சின்னனை சுற்றுப்புறத்திலுள்ள சக விவசாயிகள் பாராட்டி வருவதோடு, அவரிடம் கேட்டறிந்து வாட்டர் ஆப்பிள் விவசாயத்திலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
Read more:
International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது?
ஏஐ உதவியுடன் வீட்டுக்குள் விவசாயம்; ஹைட்ரோபோனிக்ஸில் புதுநுட்பத்தை புகுத்திய சென்னை ஸ்டார்ட்அப்