விவசாய நிலங்களில், பாசனத்திற்காக பெரியாறு அணையிலிருந்து, தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தேனி மாவட்ட விவசாயிகள், தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர். விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, பெரியாறு அணையிலிருந்து (Periyar Dam) பாசனத்திற்காக, வரும் அக்டோபர் 7ஆம் தேதி முதல், 120 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி (CM Palanisamy) உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் அறிக்கை (Report of the Chief):
தேனி மாவட்டத்தில் (Theni District) உள்ள, பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு, பாசனத்திற்காக (Irrigation) தண்ணீர் திறந்து விடுமாறு, விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, ஒருபோக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 100 கன அடி வீதம், பாசனத்திற்காக வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு மொத்தம் 1,037 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதனால், தேனி மாவட்டம், தேனி வட்டம் மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் உள்ள 5,146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி. மேலும், விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை (Water Management) மேற்கொண்டு, உயர் மகசூல் (Yield) பெற வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொண்டார். மேலும், பெரியாறு அணையிலிருந்து 18 ஆம் கால்வாயில், தண்ணீர் திறந்துவிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
18 ஆம் கால்வாய் (18th Canal):
தேனி மாவட்டம், பெரியாறு அணையிலிருந்து 18-ம் கால்வாயில் (பழனிவேல் ராஜன் கால்வாய்), தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, தேனி மாவட்டம், 18-ம் கால்வாயின் (18th Canal) கீழ் உள்ள, 4,614.25 ஏக்கர் ஒருபோக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து வரும் 7 ஆம் தேதி முதல் 30 நாட்களுக்கு, விநாடிக்கு 98 கன அடி வீதம், மொத்தம் 255 மி.கன அடி தண்ணீர் திறந்துவிட, முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
விவசாயிகள் மகிழ்ச்சி (Farmers happy):
விவசாயிகளின் வேண்டுதலை ஏற்று, உடனே பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட, தமிழக முதல்வர் உத்தரவு விட்டதை அடுத்து, விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால், உரிய நேரத்தில் பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும் என, தேனி மாவட்ட விவசாயிகள் தெரிவித்தனர். நீர் மேலாண்மையை பயன்படுத்தி, தண்ணீரை வீணாக்காமல், சிக்கனமாகப் (Thrift) பயன்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளனர். அணையிலிருந்து வரும் தண்ணீரோடு, மழையும் பெய்தால் இன்னும் மகிழ்ச்சியாகவும், அதோடு மகசூலும் அதிகரிக்கும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க...
உபரிநீரை மட்டுமே தந்து, தமிழகத்தை வஞ்சிக்கிறது கர்நாடகா! காவிரி நீர் குழுமம் தகவல்!
அடையாறு ஆற்றை அகலப்படுத்த, பொதுப்பணித்துறை மும்முரம்! சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி!
தாமிரபரணியில், கழிவுநீர் கலப்பதைத் தடுக்க சிறப்பு ஏற்பாடு!