1. செய்திகள்

அடையாறு ஆற்றை அகலப்படுத்த, பொதுப்பணித்துறை மும்முரம்! சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி!

KJ Staff
KJ Staff

Credit : Hindu Tamil

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில், பாய்ந்தோடும் அடையாறு ஆற்றை (Adyar River), அகலப்படுத்த 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணித் தொடங்கியுள்ளது. தற்போது, தாம்பரம் அருகே வரதராஜபுரத்தில் அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. பொதுப்பணித் துறையினர் (Department of Public Works) இதற்காக, தனியார் பட்டா நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டு பணிகளை தொடங்கியுள்ளனர்.

அடையாறு ஆறு பாயும் இடங்கள்

காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனூரில் தொடங்கும் அடையாறு ஆறு, செங்கல்பட்டு மாவட்டம் வழியாக சென்னை மாவட்டத்தில், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், எம்.ஜி.ஆர். நகர், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் வழியாக பட்டினப்பாக்கம் வரை சுமார் 42 கி.மீ தூரம் பயணிக்கிறது. மக்கள் தொகைப் பெருக்கத்தால் (Population) இந்த ஆற்றின், அகலம் தற்போது குறைந்துள்ளது.

வெள்ளத்தால் கரைகள் சேதம்

கடந்த காலங்களில் ஏற்பட்ட வார்தா புயல் (Vardah Cyclone) மற்றும் வெள்ளப்பெருக்கால் அடையாற்றை ஒட்டிய பகுதிகள், பாதிக்கப்பட்டதுடன் தாம்பரம், ஆதனூர், பெருங்களத்தூர், கவுல்பஜார், திருநீர்மலை, மணப்பாக்கம், எம்.ஜி.ஆர் நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அடையாற்றின் கரைகள் கடும் சேதமடைந்தன. இதையடுத்து அடையாறு ஆற்றை வருவாய் ஆவணங்களில் உள்ளது போல், சீரமைக்க அரசு உத்தரவிட்டது.

தூர்வாரும் பணித் துவக்கம்:

அடையாறு ஆற்றையொட்டிய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ரூ.20 கோடி செலவில் ஆதனூர் முதல் மணப்பாக்கம் வரை, தூர்வாரி அகலப்படுத்தப்பட்டது. அதேபோல் சென்னை நதிகள், சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் ரூ.94.76 கோடி செலவில், பொதுப்பணித் துறை மூலம் திருநீர்மலை பாலம் முதல் அடையாறு முகத்துவாரம் வரை, 25 கி.மீ நீளத்துக்கு தூர்வாரப்பட்டது. அடையாறு ஆற்றில் இணையும் சோமங்கலம், ஒரத்தூர், மணிமங்கலம் போன்ற கிளை ஆறுகளும் சீரமைக்கப்பட்டன. 6 முதல் 60 அடி வரை அகலம் உள்ள அடையாறு ஆறானது பல்வேறு இடங்களில், அளவில் சுருங்கி உள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியில்லாமால் குடியிருப்பு பகுதிகளுக்குள் (Residential areas) செல்கிறது. இதனால் அடையாறு ஆற்றை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து பொதுப்பணித் துறையினர் இதற்காகத் தனியார் பட்டா நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளனர்.

 

Credit: dinamalar

2 மடங்கு இழப்பீடு:

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் படப்பை, மணிமங்கலம், தாம்பரம், ஆதனூர் பகுதிகளில் உள்ள 37 ஏரிகளின் உபரிநீர், கால்வாய் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது. மழைக்காலங்களில் ஆற்றில் இருந்து விநாடிக்கு 8,000 கனஅடி நீர் வெளியேறி கடலில் கலக்கிறது. இந்நிலையில் போதிய கொள்ளளவு இல்லாமல் சுருங்கியுள்ள ஆற்றுப்பகுதிகளை அகலப்படுத்த முடிவுசெய்து, ஆதனூர் முதல் மணப்பாக்கம் வரை சுமார் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக காஞ்சிபுரம் எல்லையில் உள்ள, அடையாறு ஆற்றுப் பகுதியில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நிலத்தின் உரிமையாளர்களுக்கு அரசின் வழிகாட்டி மதிப்பில் உள்ளதுபோல் 2 மடங்கு இழப்பீடு (2 times compensation) வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றனர்.

சமூக ஆர்வலர்கள் கூறியது

அரசின் சிறப்பான திட்டத்தாலும், பொதுப்பணித் துறையினரின் ஒத்துழைப்பாலும், தற்போது அடையாறு ஆறு அகலப்படுத்தும் திட்டத்தை வரவேற்கிறோம். மேலும் அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் (Social activists) கருத்து தெரிவித்துள்ளனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க...

பரிநீரை மட்டுமே தந்து, தமிழகத்தை வஞ்சிக்கிறது கர்நாடகா! காவிரி நீர் குழுமம் தகவல்!

தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு, மதுரை ஐகோர்ட்டின் அசத்தலான அறிவுறை! இனி சாலை விரிவாக்கத்துக்கு மரங்களை வெட்டக்கூடாது!

விடைபெறத் துவங்கியது தென்மேற்குப் பருவமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

English Summary: To widen the Adyar river, the public sector is busy! Social activists happy!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.