வடகிழக்கு பருவமழை விலகிய நிலையிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அங்காங்கே லேசான மழை பெய்து வந்தது. கடந்த நான்கு நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வந்த நிலையில், இன்றும் நாளையும் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. எந்தந்த இடங்களில் வாய்ப்பிருக்கிறது என்று பதிவில் காணுங்கள்.
கடந்த வாரம், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நிலவி வந்த கீழடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்தது. மேலும் பல மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்பட்டன.
மேலும், “தென் கேரளாவிலிருந்து வட உள்கர்நாடகா வரை நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி"-யின் காரணமாக, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கடந்த வாரம், தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பொழிவு இருந்தது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவியதும் குறிப்பிடதக்கது.
மேலும், கடந்த, 02.02.2022. முதல் இன்று 05.02.2022 வரை: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று அறிவிப்பு வெளி வந்த நிலையில், தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
செய்தி: 'Statue of Equality' சமத்துவச் சிலையின் அடையாளமாக ராமானுஜர் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
ஆம், இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இன்று தென்மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்மாவட்டங்கள், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் அறிவிப்புவிடுத்திருக்கிறது.
மேலும் படிக்க:
திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா: வரும் 7ந்தேதி முதல் துவங்கும்