1. செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா: வரும் 7ந்தேதி முதல் துவங்கும்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Masi Festival at Thiruchendur Temple: Starts from 7th

தமிழ் கடவுள் என அனைவராலும் அறியப்பட்ட, முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூருக்கென தனி பெருமைகளும் அம்சங்களும் உள்ளன. மேலும், இங்கு கொண்டாடப்படும் விழாக்களுக்கும் தனி பெருமை இருக்கிறது.

அந்த வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு மாசி திருவிழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் கோலகலமாக நடைபெற உள்ளது.

விழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் அவர், கோவில் வளாகம், கடற்கரை, நாழிக்கிணறு பஸ்நிலையம், திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபங்களையும் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து அவர், தேர்கள் மற்றும் தேரோட்டம் நடைபெறும் வீதிகளையும் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வருகிற 7-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை 12 நாட்கள் கோலகலமாக நடைபெற உள்ளது. விழாவிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருக்கிறது.

திருவிழாவிற்கு என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது கோவில் பகுதி, திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும் தளங்களை நேரில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

அதன்படி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் செல்லும் வரிசை முறைப்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் பக்தர்கள் அமர்ந்து செல்வதற்கு வசதியாக ஒரே நேரத்தில் 100 நபர்கள் அமரக்கூடிய வகையில் அறை அமைக்கப்பட்டிருப்பதும் சிறப்பாகும். அதேபோல் முதலுதவி மையமும் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்கள் கடலில் நீராடும்போது ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க விரைவில் கடலில் தடுப்பு மிதவைகள் அமைக்கப்படும்.

செய்தி: சமத்துவச் சிலையின் அடையாளமாக ராமானுஜர் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

கடந்த சில நாட்களாக, கொரோனா உருமாற்றம் காரணமாக, வழிபாட்டுத் தளங்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே வழிபட செல்ல வேண்டும் என கட்டுபாடுகள் விதிக்கப்பட்டியிருந்தது. தற்போது, இதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. எனவே, இந்த ஆண்டு மாசி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் வழக்கம்போல் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க:

இசையை கேட்டு துங்குபவரா நீங்கள், அப்படியானால், உங்களுக்கான எச்சிரிக்கை இது!

English Summary: Masi Festival at Thiruchendur Temple: Starts from 7th Published on: 05 February 2022, 12:11 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.