வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதான சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு (Heavy Rain)
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவ மழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடச்சி மழை ஒட்டிய பகுதிகளில், தருமபுரி, சேலம் , நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் , வெப்பநிலை அதிகப்பட்சமாக 39 டிகிரி குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெயில் தாக்கம் (Heat wave)
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மதுரை, விழுப்புரம், கடலூர், புதுவை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் எனவும் பல மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Fisherman warning)
-
இன்று மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை வீசும்
-
இன்று முதல் வருகிற 23ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்
-
அதேபோல் மத்திய கிழக்கு மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கீலோமீட்டர் வேகத்தில் வீசும்
-
இதனால் மீனவர்கள் யாரும் இப்பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மழைப் பொழிவு
கடந்த 24 மணிநேரத்தை பொருத்தவரை திருப்பத்தூர், சோலையார், கள்ளந்திரியில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது, வால்பாறை 2 செ.மீ, குழித்துறை, சின்னக்கல்லாரில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
டெல்லியில் மழைக்கு வாய்ப்பு
டெல்லியில் இன்று அதிகாலை மிதமான மழை பெய்தது. இதனால் டெல்லியின் ஆதர்ஷ் நகர், ரோகிணி, ராஜ்பத், மண்டி ஹவுஸ் போன்ற பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்தது. அதேசமயம் நொய்டாவின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இம்மழை காரணமாக தேசிய தலைநகரில் மண்டி ஹவுஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் தேங்கின.
வருகிற ஜூன் 22-23 தேதிகளில் டெல்லியின் பல பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும், 25ஆம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
பதநீரைக் குளிர்பானமாக மாற்ற புதிய திட்டம்
பால் போல் வெண்மையான முகம் பெற இதை செய்தால் போதும்!
சென்னை மக்களுக்கு மானிய விலையில் காய்கறி விதைகள்