1. தோட்டக்கலை

சென்னை மக்களுக்கு மானிய விலையில் காய்கறி விதைகள் - தோட்டக்கலை துறை!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit By : The Hindu

மூன்று சென்ட் நிலத்தை சொந்தமாகக் கொண்ட சென்னை விவசாயியா நீங்கள்? அப்படியானால், அறுவடையை முடித்து, மகசூலை அள்ளி, அதிக லாபம் சாம்பாதிக்க உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை.

மானியத்துடன் கூடிய விதைகள் விற்பனை

விவசாயத்தைப் பெருக்கி வேளாண்மையைக் காக்கும் வகையில், சென்னையைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய விதைகளை விற்பனை செய்யும் திட்டத்தை தோட்டக்கலைத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றை அண்ணா நகர், திருவான்மியூர், பெரம்பூர், மாதாவரம் ஆகிய இடங்களில் உள்ள தோட்டக்கலை டிவிஷன் அலுவலங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

விதை தொகுப்பு - (Seed Kit)

சீட் கிட் (Seed Kit) என்று அழைக்கப்படும் ஒரு விதை தொகுப்பில், ஐந்து வெவ்வேறு காய்கறி விதைகள் இடம்பெற்றிருக்கும்.

அதாவது பாகற்காய், சுரக்காய், முருங்கை, பச்சைமிளகாய், தக்காளி உள்பட 5 காய்கறிக்களுக்கான விதைகள் மற்றும் இரண்டு கீரை வகைகளுக்கான விதைகளை இந்த தொகுப்பு உள்ளடக்கியிருக்கும்.

40 ரூபாய் மதிப்புள்ள இந்த விதை கிட், விவசாயிகளுக்காக மானிய விலையில் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

அனைத்து விதைகளையும் முறையாக சாகுபடி செய்தால், சராசரியாக ஒரு விவசாயி 200 கிலோ காய்கறிகள் வரை மகசூல் பெறமுடியும். கீரை வகைகளைப் பொருத்தமட்டில், திட்டமிட்டு விதைத்தால், விதைத்த இரண்டு மாதங்களுக்குள்ளேயே அறுவடை செய்ய முடியும்.

சென்னையில் 22 ஆயிரம் விதை கிட்களை விற்பனை செய்ய தோட்டக்கலைத்துறைத் திட்டமிட்டுள்ளது. இந்த விதைகளை ஜனவரி மாதம் வரவுள்ள தை பட்டம் வரைக்கும் விவசாயிகள் பாதுகாக்க முடியும். விதைகளை தகுந்த இடைவெளி விட்டு விதைப்பது கூடுதல் விளைச்சலைப் பெற வழிவகுக்கும்.

காய்கறி உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

தோட்டக்கலை மூலம் விநியோகிக்கப்படும் விதைகள் அனைத்தும் உயர் தரமானவை. இவை சென்னை, செங்கல்கட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தோட்டக்கலைத் துறையின் சிறப்பு பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவ்வாறு விதைகளை விநியோகம் செய்வதன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள மூவாயிரம் ஏக்கர் பரப்பிலான சிறு, மற்றும் நடுத்தர விவசாய நிலங்களில், காய்கறி உற்பத்தியை அதிகரிக்க தோட்டக்கலைத்துறை உதவி வருகிறது.

இந்த ஆடிப் பட்டத்தில் விதைக்க ஏதுவாக, விவசாயிகளுக்கு ஒன்றரை லட்சம் விதைக் கிட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக தோட்டக்கலைத்துறை இயக்குனர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

அளிக்கும் கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?

PM-Kisan; திட்டத்தில் நீங்கள் இணைந்துவிட்டீர்களா? இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்!!

PAN card வைத்திருப்பவர்கள் இதனை உடனே செய்யுங்கள்

English Summary: The horticulture department is selling 22,000 seed kits in Chennai. Published on: 17 June 2020, 10:56 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.