வடகிழக்கு பருவமழை விலகிய நிலையிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அங்காங்கே லேசான மழை பெய்து வந்தது.
கடந்த வாரம், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நிலவி வந்த கீழடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 30 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்தது குறிப்பிடதக்கது. மேலும் பல மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்பட்டன.
அந்த வகையில் வரவிருக்கும் நாட்களில், பெரும்பாலான மாவட்டங்களில், வரும் 10ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக உள் மாவட்டங்களில், இன்று முற்பகல் வரையிலான காலத்தில், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்துள்ளது. அதே நேரம் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்து இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், வரும் 10ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்பது குறிப்பிடதக்கது.
சென்னையில் இன்று அதிகபட்சமாக, 32 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். கடந்த, 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் எங்கும் மழை பெய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை, மேலும் அவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்கச் செல்லலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி பார்த்தால், கொடைக் காலத்தின் தொடக்கம் ஆரம்பம் ஆகிவிட்டது போல் தோன்றுகிறது. மக்களே விரைவில் கொழுத்த இருக்கும், வெயிலை எதிர்பார்த்து இருங்கள். இனி மழைக்கான வாய்ப்பு குறைந்து வருவதாக தெரிகிறது. கடந்த நாட்களாக நிலவி வந்த வானிலை, மக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியிருந்தது. ஏனேனில் மழை அனைவரையும், வீட்டிலையே சிறைப்பிடித்து வைத்திருந்தது. மேலும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் ஏற்கனவே, சிறைவாசத்தில் இருந்தனர், என்பது நம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், அடுத்து வரவிருக்கும் நாட்களில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கும், இந் நற்செய்தி மனதிற்கு நிம்மதி அளிக்கின்றது.
மேலும் படிக்க:
தபால் அலுவலகத்தின் திட்டம்: முதிர்வு நேரத்தில் ரூ. 20 லட்சம் வரை பெறலாம்!
திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா: வரும் 7ந்தேதி முதல் துவங்கும்