தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயானப் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடுமைப்படுத்தியக் கொரோனா (The bullying corona
இந்தியாவை உலுக்கியக் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டார், கொரோனாப் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு மேற்கொண்ட அதிரடி ஊரடங்கால், பாதிப்புப் படிப்படியாகக் குறைந்தது.
ஊரடங்கு நீட்டிப்பு (Curfew extension)
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 12-ந்தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த்தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 12-ந்தேதி முதல் 19-ந்தேதி காலை 6 மணி வரை கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
எவற்றுக்கெல்லாம் தடை (Prohibition of anything)
-
மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக)
-
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து
-
திரையரங்குகளை இயக்கத் தடை
-
அனைத்து மதுக்கூடங்கள்
-
நீச்சல் குளங்கள்
-
பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்
-
பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்
-
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
-
உயிரியல் பூங்காக்கள்
-
நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
-
இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
-
நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
-
மேலும், ஏற்கனவே இரவு 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் 12-7-2021 முதல் இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
கூடுதல் அனுமதி (Additional permission)
-
12ம் தேதி முதல் புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்படுகிறது.
-
மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
-
இதுகுறித்த விபரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கவேண்டும்.
-
உணவகங்கள், தேநீர் கடைகள், அடுமனைகள், நடைபாதைக் கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்குட்பட்டு 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
பொது (General)
-
அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
-
கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
-
கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
குளிர் சாதன வசதி பயன்படுத்தப்படும்.
-
இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.
-
கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.
மேலும் படிக்க...
ரேஷன் கடை:ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவு!!
நாட்டில் விரைவில் பொது சிவில் சட்டமா? தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!!
தமிழ்நாட்டில் புதிய தளர்வுகள்: ஊரடங்கு ஜூலை 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது