பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 3 July, 2021 12:16 PM IST

தடுப்பூசி என்பது அனைவருக்கும் ஒன்றுதான். இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது இரு தடுப்பு மருந்துகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளவை கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு. தடுப்பூசி கையிருப்புகளை கருத்தில்கொண்டும் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாக கூடிய 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

பின் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் செலுத்தி கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. தடுப்பூசியின் தயாரிப்பு மற்றும் கையிருப்பு அதிகமாக தொடங்கிய நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் செலுத்திக்கொள்ளும் வசதியை அரசு அறிவித்தது.

தற்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் வருங்காலத்தில் வைரஸ் உருமாறினால் அதனை எதிர்க்கும் சக்தி தடுப்பூசிகளுக்கு இருக்குமா  என்ற கேள்விக்கு பதில் பயன்பாட்டில் இருக்கக்கூடிய தடுப்பு மருந்து என்பது உருமாறிய கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்படாது என்று சொல்வதற்கான எந்த தரவுகளும் இல்லை.

இரண்டாம் டோஸ் தடுப்பூசியை புறக்கணித்தால் என்னவாகும் என்றால் செலுத்திக் கொள்ளும் முதல் டோஸ் தடுப்பூசி என்பது எதிர்ப்பு சக்திக்கு காரணமாக இருக்கக்கூடிய செல்களில் உணர்திறனை உண்டாக்கும். இரண்டாம் டோஸ் என்பதுதான் நோய் நம்மை தாக்கும்போது எதிர்த்து போராடக்கூடிய வலிமையை தரும். முதல் டோஸில் 50 சதவீதம் வரை பாதுகாப்பு கிடைக்கும் என்றும் இரண்டாம் டோஸில் 70-80 சதவீதம் வரை பாதுகாப்பு கிடைக்கும் எனவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கென  குறிப்பிட்ட பரிசோதனை எதுவும் இதுவரை இல்லை என்றே கூறலாம். நோய் பாதிப்பு இல்லாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கென எந்த வித பிரத்யேகமான பரிசோதனை இல்லை.

நாம் அனைவருக்கும் தற்போது இருக்கும் சந்தேகம் என்னவென்றால் கொரோனா தொற்று இருப்பது தெரியாமல் தடுப்பூசி எடுத்து கொண்டால் என்னவாகும் என்பது தான். இதை குறித்து கவலைப்பட தேவையில்லை ஏனென்றால் நம் உடல் ஏற்கனவே வைரஸால் எச்சரிக்கப்பட்டுவிட்டது. எனவே அது அமைதியாக அதற்கு எதிராக செயலாற்றிக் கொண்டிருக்கும். தடுப்பூசி கூடுதலான ஒன்றாகவே இருக்கும் காரணத்தினால் நமது உடலை எந்த வகையிலும் பாதிக்காது. இதனால் கொரோனா தொற்று இருப்பது தெரியாமல் தடுப்பூசி போட்டுக்கொண்டால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது.அனைவரும் தைரியமாகவே இருக்கலாம்.

மேலும் படிக்க

கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதத்திற்குள் 10% மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு!

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனாவால் மரணம் இல்லை- எய்ம்ஸ் ஆய்வில் தகவல்!

சென்னை பெண்ணுக்கு "டெல்டா பிளஸ்" கொரோனா தொற்று! - இது 3வது அலைக்கான தொடக்கமா?

English Summary: What happens when we get vaccination in the presence of corona
Published on: 03 July 2021, 12:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now