1. மற்றவை

சென்னை பெண்ணுக்கு "டெல்டா பிளஸ்" கொரோனா தொற்று! - இது 3வது அலைக்கான தொடக்கமா?

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit : India Today

கேரளா, மத்தியபிரதேசத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஒருவருக்கும் அரிதான டெல்டா பிளஸ் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் அத்தகைய பாதிப்புக்குள்ளானதாகவும், அவா் ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டவா் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

3வது அலை தொட்டக்கமா?

கடந்த ஓராண்டுக்கும் மேலாக முதல் அலை, 2வது அலை என கொரோனா தொற்று நாட்டை உலுக்கி வருகிறது. தற்போது, 2வது அலைகளில் பரவியதைக் காட்டிலும் அதிக வீரியமிக்க புதிய வகை வைரசாக ''டெல்டா பிளஸ்'' கருதப்படுவதால், மூன்றாம் அலைக்கான தொடக்கமாக இது இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

உருமாறும் கொரோனா வைரஸ்

பொதுவாக கொரோனா வைரஸை பொருத்தவரை லட்சக்கணக்கான மக்களிடம் பல்கிப் பெருகும்போது, அது தன்னைக் காத்துக் கொள்ள உருமாற்றம் பெறத் தொடங்கும். அவ்வாறு உருமாற்றமடைந்த வைரஸ்கள் ஏற்கெனவே உள்ளதை காட்டிலும், வீரியமிக்கதாகவும், அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அந்த வகையில் கரோனா முதல் அலையின்போது தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆல்ஃபா வகை வைரஸ் காணப்பட்டது.

டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்

நாளடைவில் அது மேலும் உருமாற்றமடைந்து வீரியமானது. இந்தியாவில் உருமாற்றமடைந்த அந்த வைரஸ் டெல்டா வகை கரோனா என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியது. அதன் தொடா்ச்சியாக அதிலிருந்தும் வேறுபட்ட புதிய வைரஸ்களை ''டெல்டா பிளஸ்'' எனப் பெயரிடப்பட்டது.

சென்னை பெண்ணுக்கு ''டெல்டா பிளஸ்'' கொரோனா தொற்று

தமிழகத்தில் இரண்டாம் அலை பாதிப்புகள் தொடா்பான ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக பொது சுகாதாரத் துறை முடிவு செய்தது. அதற்காக, மாநிலம் முழுவதும் மொத்தம் 1,159 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை கா்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள வைரஸ் மரபணு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அதில் இதுவரை 772 மாதிரிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், பெண் ஒருவருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் ஆய்வில் தெரியவந்தது. அவரது சளி மாதிரி அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்திலிருந்து பெறப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

மேலும் படிக்க...

டெல்டா பிளஸ் வகை கொரோனாவின் அச்சுறுத்தல்,மூன்று மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் 95% மரணத்தை தடுக்கலாம்: ICMR ஆய்வில் தகவல்

English Summary: Chennai women infected on "Delta Plus" corona varient, 3rd wave begin in Tamilnadu? Published on: 24 June 2021, 08:47 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.