
பொதுவாக ஒரு மருத்துவக் குழுவில் மருத்துவ அலுவலர் ஒருவர், செவிலியர் செவிலியர், ஓட்டுனர் ஒருவர், துப்புரவு பணியாளர் என அனைவரும் தொலைதூரக் கிராமங்களில் வாழும் மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திலேயே தேவையான மருத்துவ வசதி அளிக்க முகாம்கள் நடத்தப்படும். இது தான் நடமாடும் மருத்துவமனை ஆகும்.
எளிய மக்களும் பயன்பெறும் வகையில் தொலைதூரத்தில் உள்ள கிராமங்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் அவர்கள் இருக்கும் இடம் சென்று நோய்களை கண்டறிந்து, அதற்கான சிகிச்சை அளித்திட 2007-ம் ஆண்டு 100 மருத்துவ வாகனங்கள் வாங்கப்பட்டு, முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி அவர்களால் 100 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டது. மேலும் 2008-ம் ஆண்டு 285 நடமாடும் மருத்துவ வாகனங்கள் வாங்கப்பட்டு மொத்தம் 385 நடமாடும் மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டன.
திட்டத்தின் நோக்கம்
காசநோய்க்கான சிகிச்சை, நோய்களுக்கான சிகிச்சை, தாய்-சேய் நலன் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்து வகையில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும், கிராமங்களுக்கும், குக்கிராமங்களுக்கும் வரையறுக்கப்பட்ட பயணத்திட்டத்தின்படி மருத்துவ சேவை அளிப்பதே நடமாடும் மருத்துவமனை திட்டத்தின் நோக்கமாகும்.
என்ன செய்யப்படும்
இந்த திட்டத்தின் கீழ், ஒரு மாதத்துக்கு ஒரு வட்டாரத்தில் 40 முகாம்கள் நடத்தப்படும். அதிலும் அதிக தற்காலிக குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். குறிப்பாகச் சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய், காசநோய் உள்ளவர்களுக்கு ஒரு மாதத்துக்கான மருந்துகளும் வழங்கப்படும்.
திட்டத்திற்கான ஒதுக்கீடு
இந்தநிலையில், 2021-22-ம் ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கையில், "தொலைதூரக் கிராமங்களுக்கு மருத்துவ சேவையை வலுப்படுத்த புதிதாக 389 எண்ணிக்கையில் நடமாடும் மருத்துவக்குழு வாகனங்கள் ரூ.70 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஒரு வாகனத்துக்கு தலா ரூ.18 லட்சம் செலவில் தமிழ்நாட்டில் உள்ள 389 நடமாடும் மருத்துவ வாகனத்தை மாற்றுவதற்கு ரூ.70.02 கோடி நிதி தேசிய நலவாழ்வு குழுமத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொடக்கம்
சென்னை அண்ணா சதுக்கம் அருகே நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மூலம் புதிதாக வாங்கப்பட்ட 389 வாகனங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, அதன் சேவையை தொடங்கி வைக்கும் அடையாளமாக 133 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டது.
மேலும் படிக்க...
வீட்டிற்கே வந்து இலவச சிகிச்சை அளிக்கிறது கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ்
தடுப்பூசி போடாத நோயாளி-அறுவை சிகிச்சை செய்ய மறுத்த மருத்துவமனை!