தமிழகத்தில் அரசியல் ஜாம்பவான்களாகக் கருதப்படும், கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு ஆகக்சிறந்த ஆளுமைத் தலைவர்களும் இல்லாமல், திமுகவும், அதிமுகவும் சந்தித்த முதல் தேர்தல் என்பதால், இந்தத் தேர்தலின் முடிவுகளை நாடே ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
சட்டமன்றத் தேர்தல் (Assembly Election)
தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சர் யார் என்ற கேள்வியுடன், தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடந்தது.
மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களம் கண்டனர். வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை (Count of votes)
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக அதிகபட்சமாக 4 மேஜைகள் போடப்படுகின்றன.
பல சுற்றுகள் (Several rounds)
ஒரு மேஜையில் 500 தபால் வாக்குகள் வரை எண்ண ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மின்னணு வாக்குகள் 14 மேஜைகள் போடப்பட்டு எண்ணப்படும். ஒரு மேஜைக்கு ஒரு நுண்பார்வையாளர் வீதம் இருப்பார்கள்.காலை 9.30 மணிக்கு முதல் சுற்று முடிவுகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் வாக்குகள் எண்ணப்படுவதால் இந்த முறை முழு முடிவுகள் வெளியாக நள்ளிரவு 12 மணியாகலாம் என்று கூறப்படுகிறது. உடனுக்குடன் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்கு எண்ணிக்கை விவரங்களை பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திக்... திக்... சனி
வேட்பாளர்களில் வெற்றி பெறுகிறவர்கள் யார் என்பது நாளை தெரிய இருக்கிறது. அதுவரையில் வேட்பாளர்களுக்கு திக்... திக்... தினமாக சனிக்கிழமை இருக்கப்போகிறது. தமிழக அரசியல் வரலாற்றில், மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்களாக விளங்கிய கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடக்கும் முதல் சட்டசபை பொதுத்தேர்தல் என்பதால் இதன் முடிவை அறியத் தமிழகமே ஆவலோடு காத்திருக்கிறது.
கருத்துக்கணிப்புகள் (Polls)
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், பல கருத்து கணிப்புகள் திமுக கட்சி வெற்றி வெற்றி பெறும் என கூறியுள்ளன.
ஆனால் , கருத்து கணிப்பில் திமுக ஜெயிப்பதும், களத்தில் அதிமுக ஜெயிப்பதும் சகஜம் என்ற வகையில் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறது என தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டியுன்னர் OPSம், EPSம்.
இரட்டை இலையே வெல்லும் (The double leaf wins)
இதுதொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இரட்டை இலையே என்றென்றும் வெல்லும்".
கடந்த 2016 சட்டமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன் வந்த அனைத்து கருத்துக் கணிப்புகளும், அதிமுக வெற்றி பெறும் என கூறவேயில்லை. திமுக தான் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறியது. ஆனால், முடிவுகள் வேறு மாதிரியாக இருந்து, அதிமுக ஆட்சியைப் பிடித்தது.
முடக்குவதற்கான முயற்சி (Attempt to disable)
இப்போது வெளியிடப்பட்டுள்ள கணிப்பு முடிவுகள் கழக உடன்பிறப்புகளை சோர்வடையச் செய்யும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது என்றும், வாக்கு எண்ணிக்கையின் போது நமது செயல்பாடுகளை முடக்குவதற்கான முயற்சிகள் இவை.
இவ்வாறு இரு தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
மக்கள் மனசு எப்படி? (How do people feel?)
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து, அதிகார சுகத்தை அனுபவித்த அதிமுக, தமிழக மக்களுக்கு செய்தது என்ன? செய்யத்தவறியவை எவை? மக்கள் மனதில் இடம் யாருக்கு? இந்த முறை ஒரு மாற்றத்தைப் பார்ப்பதற்காக திமுகவிற்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்களா? அல்லது அதிமுகவே போதும் என எண்ணுகிறார்களா என்பதைத் தேர்தல் முடிவுகள்தான் தெரிவிக்கும்.
இருப்பினும், இந்த முறையும் கருத்துக்கணிப்புகள் பொய்த்துவிட்டால், ஹாட்ரிக் வெற்றியுடன் தொடர்ச்சியாக 3-வது முறையாக அதிமுக ஆட்சியமைக்கும்.
மேலும் படிக்க...
தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை- இத்தனைக் கட்டுப்பாடுகளா?
தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!
கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!