1. செய்திகள்

தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை- இத்தனைக் கட்டுப்பாடுகளா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Tomorrow's vote count - so many restrictions?
Credit : The Economic Times

மே 2ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், முகவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கான பல்வேறுக் கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் (Legislative election)

தமிழக சட்டப்பேரவையில் பதவி காலம் முடிவடைவதையொட்டி, கடந்த ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 234 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குபதிவில் 72 சதவீத வாக்குகள் பதிவாயின.

வாக்கு எண்ணிக்கை (Count of votes)

பதிவான வாக்குகள் எண்ணும்பணி நாளை நடைபெற உள்ளது. இதனிடையே தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இரவு நேர ஊடங்கு, பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிதல், ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு என பலக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

கொலைக்குற்றம் (Charges of Murder)

அதேநேரத்தில், தமிழகத்தில் கொரோனாப் பரவலுக்கு தேர்தல் பிரச்சாரம் முக்கிய காரணம் என்றும், தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே குறைகூறியுள்ளது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்ற வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கு (Full curfew)

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதி முழு ஊரடங்கு அமலில் இருக்கும். உணவகங்கள் குறிப்பிட்ட நேரத்தில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் திரள (Public mobilization)

வாக்கு எண்ணிக்கைக்குச் செல்லும் ஊழியர்கள், முகவர்களுக்கு முழு ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வெளியே பொதுமக்கள் திரள அனுமதியில்லை.

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் (Corona negative certificate)

வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும் அல்லது கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்தியிருக்க வேண்டும்.

98.6க்கு மேல் (Above 98.6)

அத்துடன் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வரும் போது உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். அப்போது வெப்பநிலை 98.6க்கு மேல் இருந்தால் முகவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மாற்று முகவர் (Alternative agents)

முகவருக்கு கொரோனா பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என வந்தால், மாற்று முகவரை வேட்பாளர் நியமிக்கலாம். வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியே பொறுப்பு. அவருக்கு தேவையான உதவியை சுகாதார அதிகாரி வழங்க வேண்டும்.

கூடுதல் அலுவலர்கள் (Additional officers)

கொரோனா வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் சான்றிதழை சம்பந்தப்பட்ட நபர்கள் சுகாதார அதிகாரிகளிடம் இருந்து பெற வேண்டும்.
மே 2ஆம் தேதி காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்கு எண்ணிக்கைப் பணிக்காகக் கூடுதலாகத் தேர்தல் உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

காலை 8.30 மணிக்கு (8.30am)

தேவைப்பட்டால் தனி அறையில் தபால் வாக்குகள் எண்ணும் பணியைத் தேர்தல் அலுவலர் அல்லது உதவி தேர்தல் அலுவலர் மேற்பார்வையில் கண்காணிக்கலாம். 8.30 மணிக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு மே 2ஆம் தேதி எந்தவொரு வெற்றிக் கொண்டாட்டத்துக்கும் அனுமதி கிடையாது. வெற்றி பெறும் வேட்பாளருடன் இரண்டு பேருக்கு மேல் வெற்றிச் சான்றிதழ் பெற வரக்கூடாது.

கிருமிநாசினி (Sanitizer)

வாக்கு எண்ணிக்கை நடக்கும் அரங்கில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும், சரியான காற்றோட்ட வசதி இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு முன்பும் பின்பும் அந்த மையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு தேர்தல் ஆணையம் பல்வேறுக் கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க...

தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!

கொரோனா தடுப்பு நடவடிக்கை! நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்!

கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!

English Summary: Tomorrow's vote count - so many restrictions? Published on: 01 May 2021, 08:13 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.