தமிழகத்தில் போக்குவரத்துச் சேவைகளில் குறுகிய கிராமம் முதல் வளர்ந்த நகரம் வரை ஆட்டோ போக்குவரத்து இயங்கி வருகிறது. இந்த ஆட்டோ-வின் கட்டணத்தை உயர்த்த பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆட்டோ ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஆட்டோ கட்டணம் உயர்கிறதா என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
இனி வீட்டிலிருந்தபடியே மின் கட்டணம் செலுத்தலாம்! விவரம் உள்ளே!
தமிழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டில் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச வாடகை கட்டணத்தை 25 ரூபாயாக அரசு நிர்ணயம் செய்தது. அதோடு, கூடுதலாகப் பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 ரூபாய் கட்டணம் என்று இருந்தது. மேலும், காத்திருப்புக் கட்டணம் 5 நிமிடத்திற்கு 3 ரூபாய் 50 காசுகள் எனவும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீத கூடுதல் கட்டணம் எனவும் வாங்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், விலைவாசி உயர்வும் ஏற்பட்டதால் அரசின் பரிந்துரையை ஆட்டோ ஓட்டுனர்கள் ஏற்கவில்லை என்ற குற்றச்சாட்டும் வந்த வண்ணம் இருந்தது. அதே சமயம் ஓலா, உபர் உள்ளிட்ட தனியார் செயலி வழி நிறுவனங்கள் ஆட்டோக்களை இயக்கின என்பது நினைவுகூறத் தக்கது. தற்போது 80 சதவீதத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் இத்தகைய செயலி நிறுவனங்களுடன் இணைந்துள்ளன. இதனைப் பயன்படுத்திச் செயலி நிறுவனங்கள் ஓட்டுனர்களிடம் அதிகக் கமிஷன் வசூலித்து வருவதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.
ஆப்பிள் ஐபோனுக்கு அதிரடி தள்ளுபடி! ரூ.2500-க்கு ஐபோன்!!
இத்தகைய சூழலில், ஆட்டோ சங்கத்தினர் போக்குவரத்து ஆணையரிடம் தங்களது கோரிக்கைகளை வைத்தனர். அவையாவன,
தமிழக அரசே ஆட்டோக்களுக்கான செயலியை வடிவமைத்து ‘டிஜிட்டல் மீட்டர்’ வழங்கி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.
தனியார் செயலிகளை விட குறைந்த கமிஷன் பெற்று, அதன் ஒரு பகுதியை நல வாரியத்தின் மூலம் ஓட்டுனர்களுக்கு வழங்க வேண்டும்.
IRCTC டிக்கெட் முன்பதிவில் திடீர் மாற்றம்: இப்போதே தெரிந்துகொள்ளுங்கள்.!
இதற்கிடையில், ஆட்டோக்களுக்கான மறுசீரமைத்த கட்டணத்தை மக்களுக்கு தெரிவிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத், ஆட்டோ கட்டணத்தை மறுவரையரை செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மற்றும் நுகர்வோர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி கருத்துக்களைக் கேட்டுள்ள இணை போக்குவரத்து ஆணையர் தலைமையிலான அந்த குழு, போக்குவரத்து துறைக்கு உயர்த்தப்பட்ட கட்டண பட்டியலைப் பரிந்துரைத்துள்ளது எனத் தகவல்கள் கூறப்படுகின்றன.
இத்தகைய சூழலில் ஆட்டோவின் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது என வெளிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க
ஃபிக்சட் டெபாசிட் (FD) வட்டி விகிதம் உயர்வு! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!