தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகக் கல்வி கற்கும் சூழல் உருவானது. இதையடுத்து விதிக்கப்பட்ட தீவிர கட்டுப்பாடுகள் மூலம் நிலைமை சீரடைந்து நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால் காலதாமதமாகப் பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஆண்டு இறுதித்தேர்வு மற்றும் கோடை விடுமுறை காலம் தள்ளிப் போனது.
உச்சம் தொடும் கொரோனோ தொற்று: தமிழகத்தில் 1 லட்சம் கொரோனோ தடுப்பூசி முகாம்கள்
இதனால் நடப்புக் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் ஜூன் 13ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். இதையே மீண்டும் தெளிவுபடுத்தினார். தலைமை செயலாளர் வெ.இறையன்பு அறிவுறுத்தலின் பேரில், சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்புத் திட்டமிட்டபடி நிகழுமா? என்று சேலம் மாவட்டத்தைச் சார்ந்த ஆசிரியர்களிடம் கேட்கையில், யு.கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரை வரும் திங்கட்கிழமை (ஜூன் 13) அன்று பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகப் பெற்றோர்களுக்கும் வாட்ஸ்-அப் குரூப்கள், எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செகண்ட் ஹேண்ட் பைக்கை வாங்குபவரா நீங்கள்? மக்களே உஷார்!
சில பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்புகள் மட்டும் இரண்டு நாட்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளன எனத் தகவல்கள் வெளிவருகின்றன. அதன்படி வரும் 15ஆம் தேதி எல்.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. இத்தகைய முடிவினைத் தனியார் பள்ளிகள் தான் எடுத்துள்ளன. அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை தமிழகப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவின்படி நாளைய தினமே திறக்கப்படுகின்றன என்று தெரிவித்தனர்.
இனி உங்க காட்டில் பணமழைதான்! அதிக வருவாய் தரும் SB அக்கவுண்ட்!
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாகவும், பின்னர் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் மாறி, மாறி அறிவிப்புகள் வெளியானது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு, பதிலளிக்கையில், போதிய அளவில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் எந்தவொரு சிக்கலும் எழாது எனத் தகவல் தெரியவந்துள்ளது.
இனி மதுக்கடைகளில் காலி மதுபாட்டிலுக்கு ரூ.10 வழங்கப்படும்: அதிரடி அறிவிப்பு!
புதிதாக எல்.கே.ஜி, யு.கே.ஜி என இரண்டு வகுப்புகளை அரசு பள்ளிகளில் தொடங்கிவிட்டு அதற்குப் போதிய அளவில் ஆசிரியர்கள் நியமிக்கவில்லை எனில், அந்த மாணவர்களின் கல்வி கேள்விக் குறியாகி விடும். கே.ஜி வகுப்புகளை அரசு பள்ளிகளில் நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது. அதனைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அதேசமயம் அதற்கான உரிய ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டனர்.
மேலும் படிக்க