பால்வளத்துறை ஆய்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர் நாசர், ஆவின் பால் பண்ணைகளில், இரவு நேரங்களில் பொறுப்பான அதிகாரிகள் பணியில் இருக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் , கோடை காலம் என்பதால் பால் உப பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்வதன் வழியே, பெருமளவு லாபம் கிடைக்கும் என்ற அவர், நெய், வெண்ணெய், பால் பவுடர், பால்கோவா, பாதாம் மிக்ஸ், தயிர், மோர், நறுமண பால் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்.
ஆவின் பாலகங்களில், பால் மற்றும் பால் உப பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை, ஆவின் அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதனிடையே, பிரச்னைக்குரிய ஒன்றியங்களில், அந்தப் பகுதி பொது மேலாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் சென்னை மற்றும் பெருநகரங்களில், ஞாயிற்றுக் கிழமை ஆவின் பாலகத்தில் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
சமீபத்தில் பால் திருட்டு குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அம்பத்துார், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட அனைத்து பால் பண்ணைகளிலும், இரவு நேரங்களில் பொறுப்பான அதிகாரிகளை பணி அமர்த்த வேண்டும் என்ற அவர், தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனிடயே கூட்டுறவு சங்கங்களில், பால் உற்பத்தியாளர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டது தொடர்பாக விவரங்களை கேட்டறிந்த அமைச்சர் நாசர், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். பால் விலையை உயர்த்தாமல் சேவையை அரசு செயலாற்றி வருகிறதாகவும் ஆவினில் 75% சதவிதம் பேர் சிறப்பாக பணியாற்றினாலும் ஒருசிலர் செய்யும் தவறுகளால் பின்னடைவு ஏற்படுகிறதாகவும் அமைச்சர் குறிப்பிடார்.
இச்சூழலில் பிரச்சினைக்குரிய ஒன்றியங்களில், அந்தப் பகுதி பொது மேலாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்ட அமைச்சர்,பால் உற்பத்தியாளர்களுக்கு பணப்பட்டுவாடா தங்கு தடையின்றி செல்வதை உறுதிபடுத்த வேண்டும் என்றார். ஆவின் பால் பொருள்களுக்கென உலக அளவில் தனி முத்திரை உள்ளது. எனவே இதனை நாம் பயன்படுத்தி கடமையை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
அடுத்தவாரம் சிங்கப்பூருக்கு ஆவின் பொருட்களை ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும் மிக விரைவில் அண்டை மாநிலம் மற்றும் நாடுகளுக்கும் ஆவின் பொருட்களை ஏற்றுமதி செய்யப்படும் உள்ளதும் என்றும் தெரிவித்தார்.பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.330 கோடி அளிக்கப்பட்டுள்ளது. பால் கவர்களில் ஆவின் இனிப்புகள் விளம்பரம் செய்யப்பட்டதின் மூலம் ஆவின் பொருட்கள் பற்றிய விளம்பரம் ஒரே நேரத்தில் 27 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கும் நேரடியாக சென்றடைந்துள்ளது என்று கூறினார்.
மேலும் படிக்க..