1. செய்திகள்

ஆவின் மில்க் கேக் உள்ளிட்ட 5 பொருட்கள் அறிமுகம்: முதல்வர் தொடக்கி வைப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
Aavin Milk cake

ஆவின் நிறுவனம் புதிதாக தயாரித்துள்ள நூடுல்ஸ் உள்ளிட்ட பொருள்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அறிமுகம் செய்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், ஆவின் நிறுவனத்தால் புதியதாக தயாரிக்கப்பட்ட பிரீமியம் மில்க் கேக், யோகர்ட் பானம் (மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவையில்), பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒய்ட்னர் ஆகிய ஐந்து புதிய பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

பிரீமியம் மில்க் கேக் (Premium Milk Cake)

ஆவின் நிறுவனம் தற்போது பால்கோவா, மைசூர்பா, ரசகுல்லா மற்றும் குலாப்ஜாமுன் போன்ற இனிப்பு பொருட்களை நுகர்வோர்களுக்கு ஏற்ற வகையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது இனிப்பு பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பிரீமியம் மில்க் கேக் தயாரித்து 250 கிராம் ரூ.100/- என்ற விலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த இனிப்பு வகை தரம் மிகுந்த பால் பவுடர் மற்றும் ஆவின் அக்மார்க் நெய் உபயோகித்து தயாரிக்கப்பட்டுள்ளது.

யோகர்ட் பானம் (Yoghurt Drink)

இளைஞர்களை கவரும் வகையில் யோகர்ட் பானம் மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவையில் தயாரிக்கப்பட்டு 200 மி.லி. அளவு கொண்ட பாட்டில் ரூ.25/- என்ற விலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த பானம் உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் ஜீரண சக்தி மேம்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பாயாசம் மிக்ஸ் (Payasam Mix)

ஆவின் நுகர்வோர் தேவையை அறிந்து பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் எளிமையாக பாயாசம் தயாரிக்கும் வகையில் பாயாசம் மிக்ஸ் 100 கிராம் ரூ.50/- மற்றும் 200 கிராம் ரூ.100/- என்ற அளவில் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த புதிய பாயாசம் மிக்ஸ் குழந்தைகளை கவரும் வகையில் மிகுந்த சுவையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பாயசம் மிக்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பாதம், முந்திரி, திராட்சை மற்றும் பால்பவுடர் ஆகிய பொருட்களை கொண்டு சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பால் புரத நூடுல்ஸ் (Milk Protein Noodles)

நுகர்வோர்களின் குறிப்பாக வேலைக்கு செல்லும் இல்லத்தரசிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையிலும் குழந்தைகள் விரும்பி சுவைக்கக்கூடிய பால் புரத சத்து மிகுந்த நூடுல்ஸ் 70 கிராம் ரூ. 10/- என்ற விலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

டெய்ரி ஒய்ட்னர் (Dairy Whitener)

அவசர பால் தேவைக்கு உடனடியாக தயாரிக்கும் வகையிலும், உணவகங்கள், தேநீர் கடைகள், விடுதிகள் மற்றும் பெரிய நிறுவனங்களின் தேவையினை கருத்தில் கொண்டும் பயணங்களின் போது எளிதாக எடுத்து செல்லக்கூடிய டெய்ரி ஒய்ட்னர் புத்தம் புது வடிவில், 20 கிராம் ரூ.10/-, 200 கிராம் ரூ.80/- மற்றும் 500 கிராம் ரூ.200/- என்ற விலையில் ஆவின் டெய்ரி ஒய்ட்னர் அறிமுகப்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க

வந்தாச்சு சலுகை விலையில் ஆவின் பால் அட்டை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

மாறும் திருமண நடைமுறை: ஆன்லைனில் விருந்து!

English Summary: Introducing 5 Ingredients Including Avin Milk Cake: CM Launcher! Published on: 20 January 2022, 06:26 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.