News

Friday, 02 September 2022 05:39 AM , by: R. Balakrishnan

World Coconut Day

இன்று செப்டம்பர் 2 உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. 24 ஆவது உலக தேங்காய் தின கொண்டாட்டங்களுக்கு இந்திய தேங்காய் மேம்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. செப்டம்பர் 2 ஆம் தேதி குஜராத் மாநிலம் ஜுனாகத்தில் நடைபெறும் கொண்டாட்டங்களை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார்.

உலக தேங்காய் தினம் (World Coconut Day)

இந்த நிகழ்ச்சியில் அவர் விவசாயிகளிடையே உரையாற்றுவார். இது தவிர, ஜுனாகத்தில் வாரியத்தின் மாநில மையத்தையும் அவர் திறந்து வைக்கிறார். தேங்காய் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் ஏற்றுமதியாளர்களுக்கான விருதுகளையும் நரேந்திர சிங் தோமர் நாளை அறிவிக்கிறார். இந்த ஆண்டு உலக தேங்காய் தினத்தில் ”மேம்பட்ட எதிர்காலத்திற்கும், வாழ்க்கைக்கும் தேங்காய் வளர்ப்பு” என்பதுதான் கருப்பொருளாகும்.
நாளை குஜராத்தில் மட்டுமல்லாமல் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் இணையமைச்சர் கைலாஷ் சவுத்ரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கவிருக்கிறார்.

குஜராத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேங்காய் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள சுமார் 1000 விவசாயிகளும், அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல கொச்சியில் நடைபெறும் விழாவில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளும் அதிகாரிகளும் பங்கேற்பார்கள் என்ற கூறப்பட்டுள்ளது.

உலக தேங்காய் தினத்தை முன்னிட்டு 'தேங்காய் வளர்ப்பில் சிறந்த வேளாண்மை நடைமுறைகள்’ என்ற சர்வதேச பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

நெல் கொள்முதல்: விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!

தேயிலைத் தோட்ட பணியாளர்களுக்கு குட் நியூஸ்: தமிழக அரசு அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)