தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் வரும் 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவன்னங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்
மிக கன மழை பெய்யும்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்து.
சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய விட்டு விட்டு மழை தொடரும். அவ்வப்போது ஒருசில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை பொழிவு
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக டிஜிபி அலுவலகத்தில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது, அதைதொடர்ந்து அண்ணா பல்கலைகழகத்தில் 14 செ. மீ, நூங்கம்பாக்கம், புழலில் தலா 13 செ. மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தின் தொடர் மழை பெய்து வருவதால் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
வெறும் ரூ.87க்கு வீடு வாங்கலாம்! இங்கில்லை... ஆனால் எங்கு தெரியுமா?
பி.எம் கிசான் திட்டத்தில் 2 தவணை பெற விண்ணப்பிக்கலாம்! அக்.31ம் தேதி கடைசி!