News

Monday, 17 August 2020 07:42 AM , by: Elavarse Sivakumar

வங்கிக்கணக்கில் மட்டுமே செலுத்தப்பட்டுவந்த அரசு மானியத்தை, இனி அஞ்சலக சேமிப்புக் கணக்கிலும் பெற முடியும். இதற்கான வழிமுறைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

தபால்களைக் கொண்டு சேர்க்கும் பணியை செய்யும் அஞ்சலகங்களில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சிறுசேமிப்பு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக, குறிப்பாக கிராமப்புற மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கின்றன அஞ்சலகங்கள். அவ்வாறு அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்? உங்களது சேமிப்புக்கணக்குடன், இனி தங்களது ஆதார் எண்ணை இணைத்து அரசு மானியங்களை பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்காக, அலுவலக சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர், உங்கள் பணம் உங்கள் கையில் (DBT) திட்டத்தின் பயன்களை பெறும் வகையில், கணக்கு திறப்பதற்கான விண்ணப்பத்தில் ஆதார் இணைப்புக்கான பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், தபால் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போரும் ஆதாரை இணைத்து அரசு மானியம் உள்ளிட்ட பயன்களை பெற முடியும்.

இதற்கு, ஆதார் இணைப்புக்கான விண்ணப்பப் படிவத்தில் தபால் சேமிப்புக் கணக்கு எண், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட தபால் அலுவலக கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வகையில், தபால் அலுவலக சேமிப்புக் கணக்குடன் ஆதாரை இணைத்து அரசு வழங்கும் மானியம் உள்ளிட்ட பயன்களை பெறலாம்.

இதேபோல், தபால் அலுவலக சேமிப்பு கணக்கு, சுகன்ய சம்ரிதி கணக்கு (sukanya samriddhi yojana SSY), பிபிஎஃப் (Public Provident Fund (PPF), தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate NSC) ஆகிய அனைத்தையும் ஒரே விண்ணப்பத்தில் திறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதன்முறை பணம் செலுத்தும்போது கணக்கு திறப்பதற்கும், சான்றிதழ் வாங்குவதற்கும் ஒரே விண்ணப்பத்தை பயன்படுத்தலாம்.

மெச்சூரிட்டி காலத்தின்போது கணக்கை மூடுவதற்கு பொது படிவம் (SB-7A) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

வெறும் 4 சதவீத வட்டியில் சிறப்பு பயிர் கடன்- வழங்குகிறது எஸ்பிஐ!

விளைபொருள் சேமிப்பு கிடங்கு அமைக்க விருப்பமா? கடன் வழங்குகிறது இந்தியன் வங்கி!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)