Krishi Jagran Tamil
Menu Close Menu

இயற்கை விவசாயத்திற்கான மானியம் பெற 21ம் தேதி வரை காலக்கெடு- ஈரோடு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!

Tuesday, 11 August 2020 08:29 AM , by: Elavarse Sivakumar
Subsidy for Organic Farming

Credit: You Tube

இயற்கை விவசாயத்திற்கான மானியம் பெற வரும் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு, ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

தோட்டக்கலைத் துறை சார்பில் நடப்பு ஆண்டில் அங்கக வழி வேளாண்மை எனப்படும், இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தும் விதமாக தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

Credit: Green Tumble

அங்கக சான்று (Certificate)

இதில் அங்ககச் சான்று பெறத் தேவையான அனைத்து செலவுகளும், தோட்டக்கலைத் துறை மூலம் மானியமாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், இயற்கை முறையில் சாகுபடி செய்த விளைபொருள்களை விவசாயிகள் சந்தைப்படுத்துவதற்கான அங்கீகாரம் கிடைப்பதுடன், நல்ல லாபம் ஈட்ட முடியும். வெளிநாட்டு ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும் பெறலாம். எனவே, இயற்கை விவசாயிகள் தனி நபராகவோ, குழுவாகவோ அங்ககச் சான்று பெற்றுக் கொள்ளலாம்.

இதுதவிர இயற்கை முறையில் காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, சாகுபடிக்குத் தேவையான மானிய உதவியும், ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. அங்ககச் சான்று பெறும் விவசாயிகளுக்குத் தோட்டக்கலைத் துறை திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும்.

Credit;My Farm

எனவே, தற்போது இயற்கை முறையில் சாகுபடி மேற்கொண்டு வரும் விவசாயிகளும், இயற்கை சாகுபடி செய்ய விருப்பமுள்ள விவசாயிகளும் தோட்டக் கலைத் துறை மூலம் சாகுபடி மானியம் பெறவும், அங்ககச் சான்று பெறுவதற்கும் தங்களது பெயரை அந்தந்த வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

சொட்டுநீர்ப் பாசனக்குழி அமைக்க ரூ.3000மானியம்- விவசாயிகள் பயன்பெற அழைப்பு!

பிரதமரின் விவசாயிகள் ஓய்வுதியத் திட்டதில் சேர என்ன செய்ய வேண்டும்- வழிமுறைகள் உங்களுக்காக!

இயற்கை விவசாயம் மானியம் பெற அழைப்பு ஈரோடு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் ஆகஸ்ட் 21க்குள் விண்ணப்பிக்கவும்
English Summary: To apply for the subsidy for natural agriculture, you have to apply by the 21st - Instruction to the farmers of Erode!

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. 42 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் நிதி கிடைப்பதில் சிக்கல்-பெறுவது எப்படி?
  2. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி- தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை கொட்டும்!
  3. அமெரிக்காவில் ஜக்கி வாசுதேவ் பைக் பயணம்- பூர்வகுடி மக்களை சந்திக்க ஏற்பாடு!
  4. வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு -வரும் 25ம் தேதி பாரத் பந்த்!
  5. விவசாயிகளின் வாழ்வு மேம்பட களமிறங்குகிறது வால்மார்ட்- ரூ.180 கோடி முதலீடு செய்கிறது!
  6. PM-KISAN : பிரதமரின் கிசான் முறைகேடு- புகார் அளிக்கத் தொலைபேசி எண் வெளியீடு!
  7. வேளாண் இளம் அறிவியல் படிப்பு- விண்ணப்பிக்க வரும் 5ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!
  8. உயருகிறது ரயில் கட்டணம்- பயணிகளுக்கு அதிர்ச்சி!
  9. காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2500 ஊக்கத் தொகை!
  10. தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.