பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 23 May, 2021 1:50 PM IST
திருந்திய நெல் சாகுபடி முறையை கடைபிடித்து சாகுபடி செய்தால் 40 சதவீத அளவு தண்ணீரை சேமிக்கலாம் என ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஈரோடு மாவட்டத்தில் விவசாய பணிகள் மேற்கொள்ளும் அளவுக்கு தற்போது நீர் இருப்பு உள்ளது. இதனை பயன்படுத்தி நெல், மக்காச்சோளம், உளுந்து, கடலை பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகிறார்கள். குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் முழுமையாக திருந்திய நெல் சாகுபடி முறையை கடைபிடித்து சாகுபடி செய்தால் 40 சதவீத அளவு தண்ணீரை சேமிக்கலாம். விளை பொருள் உற்பத்தியையும் 2 மடங்காக உயர்த்த முடியும். 

நெல் சாகுபடி செய்துள்ள வயல்களின் வரப்புகளில் பயறு வகை பயிர்களை விதைப்பு செய்தால் பூச்சி, நோய் தாக்குதல் குறைவாக இருக்கும். அதனால் கூடுதல் வருவாய் கிடைக்கும். வரப்பில் உள்ள சாறு உறிஞ்சும் பூச்சியை உண்பதற்காக வரும் பொறி வண்டு, ஊசி தட்டான் போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் அதிகமாக உற்பத்தியாகி நெல் பயிரை தாக்கக்கூடிய குருத்து பூச்சி, இலை சுருட்டு புழு போன்றவற்றை உண்பதால் நெல் பயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும். மேலும், பூச்சி மருந்து பயன்பாடு குறையும்.

அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில், 57 டன் சான்று பெற்ற நெல் விதைகள் இருப்பு உள்ளன. சிறுதானியங்கள், பயறு வகை விதைகள், நிலக்கடலை, உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. சாகுபடிக்கு தேவையான 5 ஆயிரத்து 120 டன் யூரியா, 1,260 டன் டி.ஏ.பி., 3 ஆயிரத்து 60 டன் பொட்டாஷ், 6 ஆயிரத்து 80 டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. உரங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் வேளாண்மை பணிகளுக்கு தடை கிடையாது. எனவே தனியார் விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்படும்.
வேளாண் பணிகளின் சந்தேகங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம். அதன்படி ஈரோடு 94438 65485, சென்னிமலை 94438 65485, பெருந்துறை - 75024 02545, அம்மாபேட்டை 99429 26333, மொடக்குறிச்சி 97505 20838, கொடுமுடி 94885 76435, பவானி 97885 19522, அந்தியூர் 94435 46351, கோபி 94438 52710, டி.என்.பாளையம் 94892 18360, நம்பியூர் 94424 54678, சத்தியமங்கலம் 94438 38614, பவானிசாகர் 98653 06747, தாளவாடி 98422 09758 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு பருவமழை: தமிழகத்தில் மழை பொழிவு எப்படி இருக்கும் வேளாண்மைப் பல்கலை முன்னறிவிப்பு!!

பூ, பழங்கள், காய்கறிகளை விற்பனை செய்ய விவசாயிகள் தோட்டக்கலை துறையை தொடர்புக்கொள்ளலாம்!!

உரிய தொழில்நுட்பம் மூலம் மலர் சாகுபடி செய்து இழப்பைத் தவிருங்கள், விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை!!

English Summary: You can save 40 percent water by following the modified paddy cultivation method !!
Published on: 23 May 2021, 01:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now