1. செய்திகள்

தென்மேற்கு பருவமழை: தமிழகத்தில் மழை பொழிவு எப்படி இருக்கும் வேளாண்மைப் பல்கலை முன்னறிவிப்பு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

தென்மேற்கு பருவமழையின் காலத்தில் தமிழகத்திற்கான மழை வாய்ப்பு எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பாக வேளாண் பல்கலைகழகம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்துக் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்மேற்குப் பருவமழைக் காலத்திற்கான (ஜுன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் கணிணி கட்டமைப்பைக் கொண்டு 2021-ம் ஆண்டிற்கான தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 60 சதவிகித வாய்ப்பிற்கான எதிர்பார்க்கப்படும் மழையளவு கீழே தரப்பட்டுள்ளது.

சராசாரி மழையளவு

எதிர்பார்க்கப்படும் இடங்கள் திருவள்ளுர், வேலூர், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோயமுத்தூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், கடலூர், நாகபட்டினம், நாமக்கல, மதுரை, விருதுநகர், விழப்புரம, கரூர், சேலம், பெரம்பலூர், சென்னை, திருவண்ணாமலை, மற்றும் காஞ்சீபுரம்

சராசரி மழையளவை விட அதிகமாக எதிர்பார்க்கப்படும் இடங்கள்:

கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, திருப்பூர், தூத்துக்குடி மற்றும் திருவாரூர் மாவட்டங்கள். 
 

மேலும் படிக்க...

பூ, பழங்கள், காய்கறிகளை விற்பனை செய்ய விவசாயிகள் தோட்டக்கலை துறையை தொடர்புக்கொள்ளலாம்!!

உரிய தொழில்நுட்பம் மூலம் மலர் சாகுபடி செய்து இழப்பைத் தவிருங்கள், விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை!!

ஊழல் எதிரொலி - 20,000 டன் துவரம்பருப்பு கொள்முதல் டெண்டர் அதிரடியாக ரத்து!

உடல் எடையைக் குறையைக் குறைக்க ஆசையா? கட்டாயம் இதை சாப்பிடுங்கள்! 

English Summary: Seasonal Rainfall Forecast for South West Monsoon 2021 by TNAU Published on: 23 May 2021, 12:04 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.