மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 December, 2020 9:47 PM IST
Credit : Dinamalar

வங்கிகளில் மிகப்பெரிய தொகையை அனுப்ப பயன்படும் ஆர்டிஜிஎஸ் (RTGS) முறை நாளை நள்ளிரவு 12:30 மணி முதல் துவங்கும் என ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) அறிவித்துள்ளது.

ஆர்டிஜிஎஸ் முறை:

ஆர்டிஜிஎஸ் முறை என்பது, மிகப்பெரிய தொகையை ஒரு வங்கியில் இருந்து, அதே வங்கியின் வேறொரு கிளைக்கும், மற்ற வங்கிகளுக்கும் அனுப்ப பயன்படுத்தப்படுவது. ரூ.2 லட்சத்திற்கு மேல் பணம் அனுப்புவதற்கு, இந்த முறைதான் பயன்படும். தற்போது ஆர்டிஜிஎஸ் (RTGS) முறை என்பது வங்கியின் வேலைநாட்களில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது . வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் சேவை இருக்காது.

முழுநேர சேவை:

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் (Shaktikantha Das) தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ‛‛ஆர்டிஜிஎஸ் முறை நாளை இரவு 12:30 மணி முதல் 24x7 நேரமும் செயல்படும். இதனை சாத்தியமாக்க பணியாற்றிய ரிசர்வ் வங்கி, ஐஎப்டிஏஎஸ்(Indian Financial Technology and Alied Services) மற்றும் உடன் பணியாற்றியவர்களுக்கு நன்றி. அதிகளவு பணத்தை 24x7x365 அனுப்பும் முறையை செயல்படும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதன் மூலம் தொழில் செய்யும் எளிதாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சேவைக்கு கட்டணம் ரத்து:

கடந்த அக்டோபர் மாதம், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்தில், ஆர்டிஜிஎஸ் முறை 24 மணி நேரமும் செயல்படுவது டிசம்பர் மாதம் அமலுக்கு வரும் என அந்த வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்திருந்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நெப்ட் (NEFT) சேவை, ஆண்டு முழுவதும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டது. நெப்ட், ஆர்டிஜிஎஸ் சேவைக்கு கட்டணம் விதிக்கும் முறையை ரிசர்வ் வங்கி ரத்து (Cancel) செய்துள்ளது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

ஓய்வுகால வருமானத்தைப் பெற மிகச் சிறந்த 5 முதலீட்டு திட்டங்கள்.!

கோடிக்கணக்கில் சம்பாதிக்க எளிய வழி முதலீடு தான்! நிபுணர்கள் கருத்து!

English Summary: You can send as much money as you want anytime now! RBI announces full-time RDGS service
Published on: 13 December 2020, 08:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now