மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) திட்டங்களில் பொறுமையாக முதலீடு செய்து வந்தால் நீண்ட காலத்துக்குப் பிறகு உங்களால் மிகப் பெரிய தொகையைச் சேமிக்க முடியும். அதற்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையைத் தொடர்ந்து நிதானமாக முதலீடு செய்து வர வேண்டும். எனவே, குறைந்தது 30 வயதில் ஒருவர் முதலீடு செய்யத் தொடங்கினால்கூட அவருடைய 60வது வயதில் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆகிவிடலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund)
Systematic Investment Plan எனப்படும் எஸ்.ஐ.பி. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் மாதத்துக்கு குறைந்தது 1,800 ரூபாய் நீங்கள் சேமித்தால் உங்களது ஓய்வு காலத்தில் மிகப் பெரிய தொகை உங்களது கைகளில் இருக்கும். அதாவது, ஒரு நாளைக்கு 60 ரூபாய் என்ற வீதத்தில் நீங்கள் தினமும் எடுத்து வைக்க வேண்டும். மீச்சுவல் ஃபண்ட்-ல் வட்டி விகிதம் நிரந்தரமில்லை என்றாலும் கூட குறைந்தபட்சம் 20% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், நம் சேமிப்பிற்கு வட்டி விகிதம் 15 சதவீத ரிட்டன் (15% Return) தொகை வைத்தால் கூட 30 ஆண்டுகளில் உங்களால் ஒரு கோடிக்கும் மேல் சம்பாதிக்க முடியும்.
சிறு சேமிப்பு நிறைந்த லாபம்
நீங்கள் மாதம் ரூ.1,800 முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். அடுத்த 30 ஆண்டுகளில் 15 சதவீத ரிட்டன் (15% Return) தொகையுடன் உங்களுக்கு ரூ.1,26,17,677 கிடைக்கும். நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.6,48,000 மட்டுமே.
ஆனால் உங்களுக்கு 30 ஆண்டுகளில் கிடைப்பதோ மிகப் பெரிய தொகை. எனவே எஸ்.ஐ.பி. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சிறுகச் சிறுகச் சேமித்தால் உங்களது கடைசிக் காலங்களில் மிகப் பெரிய தொகை உங்களது கைகளில் இருக்கும். குறைந்தது 15 சதவீத ரிட்டன் லாபம் வைத்தாலே நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடலாம்.
மேலும் படிக்க...
விவசாயிகளா நீங்கள்..! வட்டியே இல்லாமல் கடன் வாங்கலாம்!
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விதிகள்-அரசாணையாக வெளியிட்டது தமிழக அரசு!
பெண்களுக்காக 50% மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் திட்டம்! - இப்போதே முந்துங்கள்!!
5% முதலீடு செய்தால் போதும்! அரசின் 25 % மானியத்துடன் நீங்களும் முதலாளி ஆகலாம்!