எவரெஸ்ட் ஏறி சாதனை படைத்த தமிழக இளைஞருக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
தமிழக இளைஞர் ராஜசேகர் பச்சைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். பல்வேறு விளையாட்டுகளிலும் தமிழக இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
சென்னை நகரம் கோவளத்தினைச் சேர்ந்த ராஜசேகர் பச்சை (27), எவரெஸ்ட் சிகரத்தினை அடைந்து அடிவாரத்திற்குத் திரும்பி தன் சாதனை படைத்து இருக்கிறார். இந்த நிலையில், ராஜசேகர் பச்சைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: பல்வேறு விளையாட்டுகளிலும் நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறார்கள் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். அந்தவகையில் கோவளத்தைச் சேர்ந்த ராஜசேகர் பச்சை எனும் இளைஞர் உலகின் மிக பெரிய மற்றும் உயரிய எவரெஸ்ட் சிகரத்தைத் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஏறி அடைந்துள்ளார் என்று அறிந்து மகிழ்ந்தேன். அவருக்கு எனது பாராட்டுகள் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க
தமிழகத்தில் கோடை வெயில்: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
மீனவர்களுக்கு வர இருக்கும் பயோமெற்றிக் பதிவு-இனி எந்த பயமும் இல்லை!