அரசானது தொடர்ந்து ஊழியர்களுக்கு அடுத்தடுத்து மகிழ்ச்சியான செய்திகளைத் தந்த வண்ணம் இருக்கின்றது. அந்த வகையில் இம்முறையும் மூன்று மகிழ்ச்சி செய்திகள் அரசு ஊழியர்களுக்குக் காத்துக் கொண்டு இருக்கிறது. அது என்ன செய்தி? என்ன நல்ல மாற்றம் ஏற்படப் போகிறது என்பதைக் குறித்து இப்பதிவில் விரிவாக விளக்கப்படுகிறது.
மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!
ஜூலை மாத்தத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று பெரிய அறிவிப்புகள் காத்து இருக்கின்றன. ஆம், மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதத்தில் டிரிபில் சர்ப்ரைஸ்கள் இருக்கின்றன. அவை என்னென்ன அறிவிப்புகள் எனவும், எவ்வாறு வழங்கப்பட இருக்கின்றன எனவும் இப்பதிவு விரிவாகப் பார்க்கலாம்.
மேலும் படிக்க: TET/TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்காக மூன்று வெளியிடப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஊடக அறிக்கைகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்கள் இந்த மாதத்தில் டிரிபிள் சர்ப்ரைஸ்களைப் பெறக்கூடும். அந்த மூன்று அறிவிப்புகள் கீழே ஒவ்வொன்றாக விளக்கப்படுகின்றன.
மேலும் படிக்க: அதிரடியாகக் குறைந்த தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்!!
அகவிலைப்படி உயர்வு (DA Hike)
சமீபத்திய ஊடக அறிக்கைகளின் அடிப்படையில், ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்படலாம் என அறிவிப்புகள் வெளிவந்தன. இதன் பொருள் அகவிலைப்படி 40 சதவீதத்தை எட்டக்கூடும் என்பதாகும். பல ஊடக அறிக்கைகளின் படி பார்த்தால், ஜூலை 31 அன்று அரசாங்கம் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
18 மாத டிஏ நிலுவைத் தொகை பற்றிய அப்டேட்
நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகையை செலுத்துவது குறித்த அறிக்கைகள் மீண்டும் ஒருமுறை சர்ச்சையில் இருக்கின்றன. புதிய அறிக்கைகளின் அடிப்படையில், ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையினைச் செலுத்துவது தொடர்பான கலந்துரையாடல் விரைவில் நடக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் கணக்கில் ஒரே நேரத்தில் ரூ.1.5 லட்சம் நிலுவைத் தொகை பெறுவதற்கான நம்பிக்கையை இழக்க வேண்டாம் என சில வட்டாரங்கள் தெரிவித்த வண்ணம் இருக்கின்றன. அகவிலைபப்டி நிலுவைத் தொகையானது ஊழியர்களின் ஊதியம் மற்றும் கட்டமைப்பைப் பொறுத்து இருக்கும் என்பது நினைவுக்கூறத் தக்கது.
மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!
வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி
2021-22 நிதியாண்டில், உறுப்பினர்களின் கணக்குகளில் சேர்ந்துள்ள இபிஈப் தொகைக்கு 8.10% வருடாந்திர வட்டி விகிதத்தை வரவு வைக்க மத்திய அறங்காவலர் குழு, இபிஎஃப் பரிந்துரைத்துள்ளது என்பது மூன்றாவது நல்ல செய்தி. வட்டி விகிதம் அரசாங்க வர்த்தமானியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இபிஎஃப்ஓ விரைவில் அதன் சந்தாதாரர்களின் கணக்குகளில் வட்டி விகிதத்தை வரவு வைக்கத் தொடங்கும் எனவும் கூறப்படுகின்றது. எனவே, மத்திய அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் மகிழ்ச்சியான செய்திகள் வரக் கூடும்.
மேலும் படிக்க
KCC Update: கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு குவியும் சலுகைகள்!