பங்குச் சந்தை சரிவுகள் மற்றும் நிலையற்ற பொருளாதார சூழ்நிலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்களுக்கு எங்கு முதலீடு செய்வது என்பதில் ஒரு குழப்பமான நிலை காணப்படுகிறது. அதிலிருந்து விலக்கத்தான் இந்த பதிவு.
குறிப்பிட்ட சில காலத்தில் லாபம் தரும் முதலீடுகள் பக்கம் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அதேபோன்று லார்ஜ்கேப் மியூச்சுவல் ஃபண்டுகளைக் காட்டிலும் ஸ்மால்கேப் ஃண்டுகள் அதிக ரிஸ்கிலும் நல்ல லாபத்தைத் தரும் முதலீட்டுத் திட்டமாக இருக்கிறது எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!
எவ்வாறாயினும், முதலீட்டாளர்கள் நீண்டகாலத்தின் முதலீட்டுத் திட்டத்துடன் சென்றால், ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் பெரும்பாலும் அதிக வருமானத்தைத் தருவனவாக இருக்கின்றன. அதோடு, அவை ஒருவரின் போர்ட்ஃபோலியோவுக்கு ஒரு வருமானத்தைக் கூடுதலாக்கும் என்பதை நிரூபிப்பதாக நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
முதலீட்டு ஆலோசகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் நீண்ட கால ஸ்மால் கேப் திட்டங்கள் நடுத்தர மற்றும் சிறிய கால திட்டங்களை விட அதிக லாபம் ஈட்டுவதாக கூறுகின்றனர். இங்கு இடம்பெற்றுள்ள மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற சந்தை அபாயங்களிலும் அதிக லாபத்தைக் கொடுத்துள்ளது.
ஒரு முதலீட்டாளர் நீண்ட காலத்திற்கு ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் பெற முடியும் என்பதற்கு குவாண்ட் மியூச்சுவல் ஃபண்டின் இந்த நேரடித் திட்டம் ஒரு சிறந்த சான்றாக இருக்கின்றது.
கடந்த ஏழு ஆண்டுகளில் குவாண்ட் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ரூ.10,000 மாதாந்திர எஸ்ஐபி தொகையை ரூ.17.52 லட்சமாக மாற்றி இருக்கிறது. இந்த நிதி ஜனவரி 2013 இல் தொடங்கப்பட்டது மற்றும் முதலீட்டாளர்களுக்கு அதன் தொடக்கத்திலிருந்து 229% முழுமையான லாபத்தை அளித்துள்ளது. மேலும் இந்த ஃபண்ட் 13.50% சராசரி ஆண்டு வருமானத்தை வழங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, எந்த ஒரு திட்டத்தைத் தேர்வு செய்யும் முன்பும் நன்கு அலோச்சித்துப் பணத்தினை முதலீடு செய்தல் வேண்டும். ஆலோசகர் உதவியும் நாடலாம்.
மேலும் படிக்க
புத்தாண்டில் வணிக சிலிண்டர் விலை உயர்வு: கலக்கத்தில் பொதுமக்கள்!