Others

Saturday, 21 May 2022 06:42 PM , by: Elavarse Sivakumar

இளமைக்காலத்தில் சேமித்தால், முதுமைக்காலத்தை, முழுமையாக நிம்மதியாகக் களிக்க முடியும். அதற்காகத்தான் ஓய்வு காலத்திற்குக் கருதி கருதிச் சேர்க்க வேண்டும் என்கிறார்கள். அப்படி, ஓய்வுக்காலத்தைக் கருத்தில்கொண்டே, இன்று ஓடி உழைக்கத் தயாராக இருப்பவரா நீங்கள்? உங்களுக்கு இந்தத் திட்டம் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

ஓய்வுக் காலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை தேவைப்படும். அதற்கு இன்றிலிருந்தே நீங்கள் சேமிக்க வேண்டும். இறுதிக் காலத்தில் உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள பென்சன் தொகை உதவியாக இருக்கும்.

தேசிய சேமிப்புத் திட்டம் (NPS)

மத்திய அரசின் (National pension scheme 2022) சூப்பர் திட்டம். தேசிய சேமிப்புத் திட்டம் என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாகும்.

இது, மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டம் முதலில் 2004ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 2009ஆம் ஆண்டில் அனைத்து பொதுமக்களுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது.

சிறப்பு அம்சங்கள்

18 முதல் 65 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் இப்போது 8 முதல் 10 சதவீதம் வரையில் வட்டி லாபம் கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல், இத்திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் 80சி-இன் கீழ் வரிச் சலுகை வழங்கப்படுகிறது.

இரண்டு பிரிவுகள்

இத்திட்டத்தில் டையர் 1, டையர் 2 என இரண்டு பிரிவுகள் உள்ளன. டையர் 2 பிரிவில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சேமிப்புப் பணத்தை எடுக்கலாம். முதல் பிரிவில் குறைந்தது 500 ரூபாயும், இரண்டாம் பிரிவில் குறைந்தது 1000 ரூபாயும் செலுத்தி கணக்கு தொடங்கலாம்.

ரூ.1 லட்சம்

தேசிய பென்சன் திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5.000 ரூபாய் முதலீடு செய்தால் உங்களது ஓய்வுக் காலத்தில் மாதம் ரூ.1 லட்சம் பென்சன் வாங்கலாம். 25 வயதில் இத்திட்டத்தில் இணைந்தால் இந்த அளவுக்கு பென்சன் பெற முடியும்.

மேலும் படிக்க...

வருடத்திற்கு 3 சிலிண்டர்கள்- இனி இலவசமாகக் கிடைக்கும்!

குடிசை வீட்டிற்கு ரூ. 2.5 லட்சம் கரண்ட் பில் - அடக் கொடுமையே.!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)