ராஜஸ்தானில், தன் குடும்பத்தில், 35 ஆண்டுகளுக்கு பின் பிறந்த, முதல் பெண் குழந்தையை ஹெலிகாப்டரில் (Helicopter) அழைத்து வந்த தந்தைக்கு, சமூக ஊடகங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
ஹெலிகாப்டரில் பெண்குழந்தை
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, நிம்ப்டி சந்தவாடா கிராமத்தைச் சேர்ந்த, ஹனுமன் பிரஜாபதி - சுக்கி தேவி தம்பதிக்கு, கடந்த மார்ச்சில், அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பின் தாய் வீட்டில் தங்கியிருந்த மனைவி மற்றும் குழந்தைக்கு தடபுடலாக வரவேற்பு கொடுத்து, வீட்டிற்கு அழைத்து வர, ஒரு ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்தார், ஹனுமன் பிரஜாபதி.
ஹர்சோலவ் கிராமத்தில் இருந்து, ஹெலிகாப்டரில், மனைவி மற்றும் மகளை தன் கிராமத்திற்கு வரவழைத்து அசத்தினார். 40 கி.மீ., துாரத்தை, ஹெலிகாப்டர், 10 நிமிடங்களில் கடந்தது. சொந்த ஊரில், குழந்தையுடன் வந்த ஹனுமன் தம்பதிக்கு, பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. ''கடந்த, 35 ஆண்டுகளுக்குப் பின், எங்கள் குடும்பத்தில் முதன் முதலாக, ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவளின் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்,'' என, ஹனுமன் பிரஜாபதியின் தந்தை, மதன்லால் மகிழ்ச்சி யுடன் தெரிவித்தார்.
ஒரு கிராமத்தில், ஹெலிகாப்டரில் பெண் குழந்தை அழைத்து வரப்பட்ட காட்சி, சமூக ஊடகங்களில் (Social media) பரவியதை அடுத்து, ஹனுமன் பிரஜாபதிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
மேலும் படிக்க
உலக பூமி தினம்! பிளாஷ்டிக்கை தவிர்த்து, நம் பூமியை மீட்டெடுப்போம்!
சீசன் இல்லாத காலத்தில் மல்லிகைப்பூ பூக்க ஆலோசனை வழங்குகிறது வேளாண் துறை! குறைந்த செலவில் அதிக இலாபம்!