Others

Wednesday, 22 June 2022 03:48 PM , by: Poonguzhali R

DA 6% hikes for Central Government employees!

நீண்ட நாட்களாக காத்திருந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி ஒன்று வந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி வரும் ஜூலை 1 முதல் அதிகரிக்கப்பட இருக்கிறது. ஊடக அறிக்கையின்வழி வெளியான தகவலின்படி அரசாங்கம் ஜூலை 1 முதல் அகவிலைப்படியை 6 சதவீதம் அதிகரிக்க இருக்கிறது. இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்: HRA உயர்கிறது!

 

அகவிலைப்படியின் அதிகரிப்பு என்பது ஏஐசிபிஐ-இன் தரவைப் பொறுத்து அமைகிறது. 2022 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏஐசிபிஐ குறியீடானது உயர்ந்தது. இதன் காரணமாக அகவிலைப்படியில் 5% அதிகரிப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதாவது, அப்போது ஊழியர்களின் டிஏ 34 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக உயர்ந்தது. அதுபோல, இப்போது புதிய தரவுகளின்படி, ஊழியர்களின் டிஏ-யானது 6% அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

மேலும் படிக்க: மலிவான விலையில் 5G ஐபோன்! இன்றே வாங்குங்க!!

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், ஏஐசிபிஐ குறியீட்டில் குறிப்பிடும் அளவு சரிவு இருந்தது. ஆனாலும், அதன் பிறகு ஏஐசிபிஐ-இன் புள்ளிவிவரங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. ஜனவரியில் 125.1 என்ற அளவிலும், பிப்ரவரியில் 125 என்ற அளவிலும், மார்ச் மாதத்தில் 126 என்ற அளவிலும் இருந்தது. இப்போது ஏப்ரல் மாதத்தின் புள்ளிவிவரங்களும் வெளிவந்து இருக்கின்றன.

மேலும் படிக்க: தினமும் 7 ரூபாய் சேமித்து 60,000 பென்சன் பெறும் சூப்பர் திட்டம்!

ஏப்ரல் மாதத்திற்கான வெளிவந்த தரவின்படி, ஏஐசிபிஐ குறியீடு 127.7 ஆக உள்ளது. இதில் 1.35 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மே மாதத்திற்கான எண்ணிக்கை விரைவில் வர இருக்கிறது. மே மாதத்திலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால், டிஏ-வில் 6% அதிகரிப்பு இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் தரும் மத்திய அரசு! இன்றே விண்ணப்பியுங்கள்!!

எவ்வளவு உயரும்?
அரசு 6% அகவிலைப்படியை உயர்த்தும் நிலை ஏற்பட்டால், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 34% லிருந்து 40% ஆக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

2 ரூபாயில் ரூ. 36,000 பென்ஷன் பெறும் மத்திய அரசின் திட்டம்!

அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! இன்றைய விலை நிலவரம்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)