தமிழகத்தின் அரசு பணிகளில் ஒன்றாக இருப்பது நியாய விலைக்க கடைகளின் பணி. இப்பணியில் உள்ள ஊழியர்கள் தங்களின் அகவிலைப்படியை உயர்த்தக் கேட்டுக் கொண்டு இருந்தனர். அதைத் தொடர்ந்து அகவிலைப்படி உயர்ந்துள்ளது. அது குறித்த விரிவான செய்தியை இப்பதிவு விளக்குகிறது.
மேலும் படிக்க: 50% மானியத்தில் டிராக்டர் வழங்கும் மத்திய அரசின் திட்டம்! இன்றே அப்ளை செய்யுங்க.!
தமிழக நியாய விலைக் கடைகளில் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் அகவிலைப்படி 28% சதவீதமாக உயர்ந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
பொதுவாக, அகவிலைப்படி என்பது பொருட்களின் விலையேற்றத்தினைக் கருத்தில் கொண்டு அதன் அடைப்படையில் அடிப்படை சம்பளத்துடன் இணைத்துக் கொடுப்பது ஆகும்.
மேலும் படிக்க: விவாசாயிகளுக்கு 3% மானியத்தில் கடன் வழங்கும் புதிய திட்டம்!
இந்நிலையில், கடந்த 7,8,9 ஆகிய தேதிகளில் ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தும் பொருட்டுக் கூட்டுறவு தொழிலாளர் சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டன. இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாகக் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்த நிலையில் இந்த அகவிலைப்படி உயர்வு செய்தி வெளிவந்துள்ளது. இது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
இந்த அறிக்கை கூறியதாவது, “கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய நியாய விலைக்கடைகளில் பணியாற்றுகின்ற விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 22.02.2021 முதல் ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு 14% அகவிலைப்படி பெற அனுமதிக்கப்பட்டிருந்தது.
1.01.2022 முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14% அகவிலைப்படி உயர்வை வழங்குமாறு நியாய விலைக்கடை பணியாளர்கள் கூறிய கோரிக்கையினைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசீலித்தார். இதைத் தொடர்ந்து, 1.01.2022 முதல் நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 28% அகவிலைப்படி பெற உத்தரவு வெளியிடப்பட்டது. மேலும், அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்களை பெறவும் உத்தரவு வெளியிடப்பட்டது.
மேலும் படிக்க: பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் தரும் மத்திய அரசு! இன்றே விண்ணப்பியுங்கள்!!
இந்த அகவிலைப்படி உயர்வால் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நியாய விலைக் கடைகளில் பணிபுரியக் கூடிய 19,658 விற்பனையாளர்கள் மற்றும் 2,852 கட்டுநர்கள், என மொத்தமாக 22,510 பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்றுய் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் ஆண்டொன்றுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
கோழி வளர்ப்புக்குக் கடன் வழங்கும் வங்கிகள்! இன்றே பதிவு செய்யுங்கள்!!
FD-யின் வட்டியை அதிகரித்த வங்கிகள் எவை? புதிய வட்டிவிகிதங்களின் பட்டியல் உள்ளே!